Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'லிங்கா’ பிரச்சனை - களத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்!

’லிங்கா’ படத்தின் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க களத்தில் ரஜினி ரசிகர்களே குதிக்க திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து தனது அபிமான நடிகரின் பெயருக்கு பங்கம் விளைவிப்பதற்கு கண்டன போராட்டம் நடத்த உள்ளனர். 

விநியோகஸ்தர்கள் படத்தின் நஷ்டத்தை முன்வைத்து ‘மெகா பிச்சை’ போராட்டம் அறிவிப்பு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தியில்,  ‘லிங்கா’ படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டமானது, திருச்சி, தஞ்சை சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தமிழகம் முழுவதும்  வெளியிட்ட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டுமென நாங்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். 

இதன் அடுத்தகட்டமாக ‘மெகா பிச்சை’ போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில் , நஷ்டம் என்றால் அதை குறித்து பேசாமல், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரஜினி படமே ஓடாது, ரஜினி ரசிகளுக்கு வயசாகிவிட்டது என கிண்டலடித்துள்ளார். இது ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் தற்போது விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தும் அதே நாளில் ரசிகர்களும் எதிர்ப்பு போராட்டம் நடத்த உள்ளனர். இது குறித்து இணையங்களிலும் ரஜினி ரசிகர்கள் ஆதரவு திரட்ட துவங்கிவிட்டனர் என கூறியுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close