Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் அரசியலில் குதித்தார் பவர்ஸ்டார்!

தமிழ் மாநில கட்சியில் இணைந்து நடிகர் பவர்ஸ்டார் மீண்டும் அரசியலில் குதித்துள்ளார்.


சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் தொடங்கிய, தமிழ் மாநில கட்சியின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டையில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.



இந்த கூட்டத்தில் திடீரென மேடை ஏறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தான் தமிழ் மாநில கட்சியில் இணைவதாக அறிவித்தார். உடனே அவருக்கு கட்சி நிறுவனர் பால்கனகராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் ஏற்கனவே அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் மாநில கட்சியின் தேர்தல் சின்னமாக ‘சங்கு’ சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்து பால்கனகராஜ் பேசும்போது, ''2 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் மாநில கட்சி எழுச்சியுடன் வீறுநடை போடுகிறது. ஏராளமான இளைஞர்கள், படித்தவர்கள் தமிழ் மாநில கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் முன்னேற வேண்டும். மக்களுக்கு அரசு இலவசங்களை தருவதை நிறுத்தி விட்டு கல்வியை இலவசமாக வழங்க முன்வர வேண்டும். ஊழலை ஒழிக்க கொண்டுவரப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும்.

67 ஆம் ஆண்டு முதல் திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். ஊழலை ஒழிக்க மிகப்பெரிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். இதற்கு தமிழ் மாநில கட்சி பாடுபடும்" என்றார்.

கூட்டத்தில் இளங்கோவன் பேசும்போது, ''பால்கனகராஜ் ஆரம்பித்த தமிழ் மாநில கட்சியில் சட்டத்துறையை சார்ந்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான இளைஞர்களும் சேர்ந்திருப்பதை இங்கு காண முடிகிறது. ஊழலை ஒழிக்க முன்னெடுத்து நடத்தும் இவர்களது போராட்டத்துக்கு காங்கிரசின் ஆதரவு நிச்சயம் உண்டு" என்றார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close