Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது ’கள்ளப்படம்’!

மிஷ்கினின் உதவி இயக்குனர் வடிவேல் இயக்கி நடித்திருக்கும் படம் ‘கள்ளப்படம்’ அடுத்த மாதம் 13 -ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
 
நான்கு இளைஞர்கள் ஒரு படம் எடுக்க முயற்சி செய்வதை பின்னணியாக வைத்து நகரும் கதைக்களமே ‘கள்ளப்படம்’. அந்த நான்கு இளைஞர்களாக படத்தை இயக்கியிருக்கும் வடிவேல், படத்தின் இசையமைப்பாளர் கே மற்றும் படத்தின் எடிட்டர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நால்வரின் படம் எடுக்கும் முயற்சிதான் ’கள்ளப்படம்’.
 
வித்தியாசமான கதை, திரைக்கதையில் உருவாக்கியிருக்கும் இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்திற்கு ய் சான்றிதழ் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் 13 -ஆம் தேதி மிஷ்கினின் லோன் வுல்ஃப் புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close