Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கே.வி.ஆனந்த் அடுத்த படம் - பரிசீலனையில் விஜய், அஜித்?

'அனேகன்’ படத்தையடுத்து கே.வி.ஆனந்த் மீண்டும் தனது அடுத்த பட வேலைகளில் பிசியாகிவிட்டார். ‘அனேகன்’ படத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அதிலும் தனுஷின் காளி கேரக்டர் பலரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ‘மாற்றான்’ , மற்றும் ‘அனேகன்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறது.

’அனேகன்’ படத்தின் கதையை ஏற்கனவே விஜய்யிடம் கே.வி.ஆனந்த் சொன்னது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தில் விஜய் நடிக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. அதேபோல் அஜித் பெயரும் இந்த படத்தில் அடிபட துவங்கியுள்ளது. 

எனினும் கே.வி.ஆஅனந்த் எப்போதும் ஒரு கதையை முடிக்காமல் ஹீரோக்களை தேர்வு செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை காத்திருக்கத் தான் வேண்டும்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close