Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’அலைப்பாயுதே’ தினத்தில் ‘ஓகே கண்மணி’!

“அலைப்பாயுதே” படத்திற்குப் பிறகு அதே பாணியில் மீண்டும் ஒரு காதல் கதையை படமாக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். ஏப்ரல் 14, 2000ல் வெளியான “அலைப்பாயுதே” படத்தினைப் போலவே “ஓகே கண்மணி” படத்தையும் இந்த வருட ஏப்ரல் 14ல் வெளியிடவிருக்கிறார்கள்.

துல்கர், நித்யா மேனன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “ஓகே கண்மணி”. படத்தலைப்பில் குழப்பம் நிலவியது. “ஓகே” ஆங்கில வார்த்தை என்பதால் அத்தலைப்பினை “ஓ காதல் கண்மணி” என்று மாற்றப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. அதன் சுருக்கமான வார்த்தையே “ஓகே கண்மணி” என்று படக்குழு கூறியது. இறுதியாக “ஓகே கண்மணி” தான் படத்தின் தலைப்பு என்று உறுதியாகி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூறுகையில், “ மணிரத்னத்தின் நண்பரின் மகளுக்கு நிகழ்ந்த உண்மை நிகழ்வையே “அலைப்பாயுதே”வில் படமாக எடுத்திருப்பார், அதுபோலவே “ஓகே கண்மணி” படமும் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை நிகழ்வே என்று கூறியுள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவணிக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் படத்தினை தயாரிக்கிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்