Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினி, கமலிடம் சண்டைப் போட்டேன்! எஸ்.பி முத்துராமன் நெகிழ்ச்சி!

குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட மகேந்திரன் மற்றும் “உடும்பன்” பட நாயகன் திலிப் இணைந்து நடிக்கும் “ விரைவில் இசை” படத்தின் இசை வெளியீட்டில் ரஜினி கமலிடம் சண்டை போட்ட அனுபவங்களை பகிரிந்து கொண்டார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

“ரஜினி திரையுலகில் நுழையும் போது அவருக்கு சவாலாக சிவாஜி, கமல்னு பலர் இருந்தனர். “எப்படி நான் வெற்றி பெறுவது என்று யோசித்தேன், எனக்கென்று ஒரு ஸ்டைல், ஸ்பீடு என்று என் பாணியாக சேர்த்துக் கொண்டேன், வெற்றியும் பெற்றேன்” இதை ரஜினி என்னிடம் கூறியது.

ரஜினியை வைத்து 25 படங்கள், கமலை வைத்து 10 படங்கள், நடிகர் திலகத்தை வைத்து 3 படங்கள் இயக்கியிருக்கிறேன் என்றால் எப்படி? எங்களுக்குள் அந்தளவுக்குப் புரிதல் இருக்கும். ஆனால் ரஜினி, கமலுடன் நான் போடாத சண்டைகளா?

நாங்கள் போட்ட சண்டையைப் பார்த்து பலர் இவர் இனி ரஜினி, கமலை வைத்து படம் எடுக்க மாட்டார் என்று பேசுவார்கள், ஆனால் அவர்களை வைத்து தான் அதிகப்படியான படங்களை எடுத்திருக்கிறேன். எங்களிடம் இருந்தது ஈகோ இல்லை, நீயா நானா போட்டி இல்லை. படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்கான கருத்து மோதல் மட்டுமே. எங்கள் மோதல், எங்கள் படத்தின் வெற்றியிலேயே முடிந்திருக்கிறது” என்றார் இயக்குநர் முத்துராமன்.

இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தன்னுடைய 20 வருட திரையுலக வாழ்க்கையில் 70 படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்