Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘மனைவி புண்ணியத்தில் தனுஷ் மாதிரி ஆகப் போறேன்!’’ - ‘மெட்ராஸ்’ கலையரசன்!

‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கிய இரண்டாவது படத்தின் இரண்டாவது ஹீரோவாக நடித்த கலையரசனுக்கு ‘மெட்ராஸ்’  5-வது படம். ஆனால், இப்போது மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த ஹீரோவாகி விட்டார் கலை. பாபி சிம்ஹாவுடன் ‘உறுமீன்’ படத்தில் செம பிஸியாக இருந்தவர், செம ஹேப்பியாகவும் இருந்தார். காரணம், கலையரசனுக்குப் பிறந்த நாள். அதைவிட ஹேப்பியான விஷயம் - நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசை ஒன்று நிறைவேறியதை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். அதுவும் மனைவி மூலமாக அது நிறைவேறியதில், கலை இன்னும் ஹேப்பி அண்ணாச்சி!

விஷயம் இதுதான் -  சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே, ‘உடம்பை ஃபிட்டா வெச்சுக்கணும். அதுக்கு பெஸ்ட் சைக்கிளிங்தான். காஸ்ட்லியா ஒரு சைக்கிள் வாங்கணும்டா செல்லம்’ என்று மனைவி பிரியாவிடம் அடிக்கடி சொல்லி வந்தாராம் கலை. இன்றைக்குக் கண்விழித்தபோது, தான் மிகவும் விரும்பிய ‘கேனான் டேல்’ என்னும் சைக்கிளை தடாலெனப் பரிசளித்து இன்ப அதிர்ச்சி தந்து விட்டாராம் ப்ரியா. ‘‘செம ஆச்சரியம் சார். உண்மையைச் சொல்லணும்னா, இப்போதைக்கு நமக்கு ஜாகுவார் வாங்கணும்; ரோல்ஸ்ராய்ஸ் வாங்கணும்னு எல்லாம் ஆசை இல்லை. ஜாகுவார் ஸ்டிக்கர்கூட என்னால வாங்க முடியாதுங்கறது வேற விஷயம். உடம்பை ஃபிட்டா வெச்சுக்க, காஸ்ட்லியா ஒரு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசைப்பட்டேன். கைல காசு இல்லை. பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்தேன். இப்போதான் ஹீரோ ஆகிட்டேனே! சைக்கிள் வாங்கணும்ங்கிற ஐடியா மறந்து, நேரமும் இல்லாமப் போயிடுச்சு. திடீர்னு என் பொண்டாட்டி ப்ரியா, என் பிறந்த நாளப்போ சைக்கிள் சாவியைக் குடுத்ததும் அப்படியே ஷாக் ஆகிட்டேன்!’ என்னோட ‘கேனான் டேல் சைக்கிள்’ 40,000 ரூபாய். இனிமேல் நேரம் இல்லைன்னு சொன்னா உதைதான் விழும். நேரம் ஒதுக்கணும். இண்டோர் ஷூட்டிங்னா சைக்கிள்லேயே போயிடலாம்னு பார்க்கறேன். நாளைல இருந்து ஒர்க்-அவுட் ஸ்டார்ட் பண்ணிட வேண்டியதுதான். எப்படியாவது விஜய் சார், தனுஷ் மாதிரி சிலிம் ஆகிக் காட்டணும்! அதான் என்னோட ஆசை! என் பொண்டாட்டி புண்ணியத்துல ஒரு நாள் தனுஷ் மாதிரி ஆகிக் காட்டுறேன்! ஐ லவ் யூ பொண்டாட்டி!’’ என்று ‘மெட்ராஸ்’ அன்புவாக மாறி, மனைவி மீது பாசத்தைப் பொழிய ஆரம்பித்தார் கலை.

- தமிழ்-

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close