Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எனக்கும் தனுஷுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை - சிவகார்த்திகேயன்!

துரை செந்தில் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு , மனோபாலா, இமான் அண்ணாச்சி, உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையமைத்திருக்கும் படம் ‘காக்கி சட்டை’. 

படம் வருகிற 27ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் இது சம்மந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் பேசிய சிவகார்த்திகேயன். தனக்கு இரண்டாவது படம் கொடுத்த தனுஷ் மற்றும் இயக்குநர், துரை செந்தில் குமார், அனிருத், என படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றிகளை பதிவு செய்தார். 

தன்னுடைய அப்பாவை பெரும்பாலும் போலீஸாகவே பாத்து வளர்ந்ததால் , எனக்கு இந்த படம் செண்டிமெண்டாக சற்றே நெருக்கமான படம். உறவினர்கள், நண்பர்கள் என பலரும் நீ போலீஸா ஆகியிருக்கலாம். என கூறினார்கள். அம்மா எதுவும் சொல்லவில்லை, திரையில் பார்க்க காத்திருக்கிறேன் என்று கூறியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார். 

தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், எனக்கும் தனுஷுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. முதல் படத்தில் கூடவே இருந்தார் என்றால் ஒரு தயாரிப்பாளராக எங்களை கவனித்தார். இப்போது இந்த படத்தின் இசை வெளியீடு, இப்போது பத்திரிகையாளர் சந்திப்பு என அவர் ஏன் வரவில்லை என பலரும் கேட்கிறார்கள். இரண்டாவது படம் எங்கள் மீது உள்ள நம்பிக்கை. இது உங்க படம் நீங்க பாத்துக்கங்க, என்று தயாரிப்பாளராக எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டார். என்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவா அதுவும் போலீஸா என்ன நடிக்க வைக்க ஒத்துகிட்டதுக்கே நான் நன்றி சொல்லணும் என நெகிழ்ந்தார் சிவகார்த்திகேயன். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close