Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதை எழுதும் பொழுதே தீர்மானித்து விட்டோன் ராஜேந்திரனுக்குத்தான் இந்த கேரக்டர்னு - இயக்குநர் சக்திவேல்!

இயக்குனர் எஸ்.என். சக்திவேல் இயக்கத்தில், தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.விவிஆர் சினிமாக்ஸ் வெங்கட்ராஜ் தயாரிக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

 இப்படத்தில் ராஜெந்திரன் குறித்து பேசுகையில், “ராஜேந்திரன் சார் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் கதை எழுதும் பொழுதே அவர்தான் இக்கதாப்பாதிரத்தில் நடிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டோம். அவரின் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’,’ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ‘டார்லிங் ’ ஆகிய படங்களில் இருந்த கதாபாத்திரங்களைவிட இப்படத்தில் கதையோடு நகரும் கதாப்பாத்திரமாக வருவார்.”

 “ ஒரு முழு நீள நகைச்சுவை படத்திற்கு, அவரது டயாலாக் டெலிவரியும், உடல் மொழியும் இப்படத்திற்கு பக்க பலமாய் அமைந்திருக்கிறது. இவரை வைத்தே டீசரை கட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினோம்.”

 “ ஒரு காட்சியில் அதிக எடையுள்ள துப்பாக்கியை வைத்துகொண்டு மரத்து மேல் இருந்து குதிக்க வேண்டும். டூப் போடாமல் அவரே குதித்து பலத்த காயம் ஏற்ப்பட்டது. அதை துளிக்கூட பொருட்படுத்தாமல் ரீ-டேக் போலாம் என்று சொன்னார்.” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் இயக்குநர் சக்திவேல்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close