Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’காஞ்சனா 2’ ஆக மாறியது ’முனி3’!

ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் ராகவ லாரன்ஸ், டாப்சி பண்ணு நடித்து வரும் படம் ‘முனி’.  பேய் படத்தை காமெடி கலந்து கொடுத்த ஒரு டிரெண்ட் செட்டர் படம் என்றே இந்த படத்தை கூறலாம். 

இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்து ‘காஞ்சனா’ என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தார் லாரன்ஸ். தற்போது அடுத்த கட்டமாக ‘முனி 3’ படத்தை இயக்கி வருகிறார். 

‘முனி’ படம் முதல் படம் எனினும், ‘காஞ்சனா’ படமே கமர்ஷியல் அளவில் ஹிட்டடித்தது. இந்நிலையில் தற்போது உருவாகிவரும் ‘முனி3’ படத்தின் தலைப்பை ‘காஞ்சனா 2’ என பெயர் மாற்றியுள்ளார். 

படம் கோடைகால சிறப்பாக திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close