Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.வி.பிரகாஷ் படத்தில் சிம்ரன்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார் சிம்ரன். பல முன்னணி கதாநாயகர்களின் காதல் நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். மேலும் தமிழில் ஸீரோ ஸ்ட்ரக்சர் என்ற ஒல்லி உடல்வாகை தீவிரமாக மாற்றிய பெருமைக்கும் சொந்தக்காரர் இவர்தான். 

சிம்ரன் தனது நடிப்பு, ஆடல் ஆகியவற்றின் மூலம் உச்சத்திலிருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விடைபெற்றார். தனது அழகிற்கு ஏற்றார்போல் அதீத திறமையுடையவர் என கூறப்பட்டவர். தமிழ் சினிமாவில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறார்.

தற்போது GV பிரகாஷ்ராஜ் மற்றும் ‘கயல்’ அனந்தி நடிக்கும் ‘த்ரிஷா இல்லான நயன்தாரா’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குநர் ஆதிக் இப்படத்தின் கதையை கூறினார். கதை வித்தியாசமாக இருந்ததால் ஓகே சொல்லிவிட்டேன். முக்கியாம கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நான் நடிக்கவுள்ளேன். “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா” படம் மூலம் மீண்டும் வெள்ளித் திரையில் என்னை நானே பார்க்க ஆவலாய் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சிம்ரன்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close