Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விரைவில் ’சண்டக்கோழி 2’!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண், தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலரும் நடித்து 2005ல் கமர்ஷியல் ஹிட்டடித்த படம் ‘சண்டக்கோழி’. இப்படத்தின் அடுத்த பாகம் விரைவில் துவங்கப்பட உள்ளது. 

இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு லிங்குசாமி மீடியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் விரைல் விஷால் படம், மற்றும் அதைத் தொடர்ந்து கார்த்தி படம் என இந்த வருட திட்டமாக அனுப்பியிருந்தார். 

அதன்படி தற்போது விஷால் நடிப்பில் ‘சண்டக்கோழி 2’ மே 1ம் தேதி துவங்கப்பட உள்ளது. அதற்கு முன்பு சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் படம் அடுத்த மாதம் துவங்கி நடைபெற உள்ளது. 

’சண்டக்கோழி2’ படத்தை விஷால் தனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் வாயிலாக தயாரிக்க இருக்கிறார். படத்திற்கு மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. படம் தீபாவளி சிறப்பாக வெளியாகலாம். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close