Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்று கெட்டப்களில் ஜீவா!

’டேவிட்’, ’என்றென்றும் புன்னகை’, ‘யான்’ என தொடர்ந்து ஜீவாவின் படங்கள் எதிர்பார்த்த வரவேற்புகள் இல்லாமல் போகவே தனது அடுத்த படம் குறித்து சரியான முடிவு எடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்.தற்போது அடுத்த படமாக ராம்நாத் இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் ஜீவாவிற்கு மூன்று வேடமாம். மேலும் சமுத்திரகனி இதில் போலீஸ் அதிகாரியாக முக்கிய ரோலில் வருகிறார்.சக்தி ஒளிப்பதிவு செய்ய, விடி விஜயன் எடிட்டிங்கை கவனிக்கிறார். கலை இயக்கம் சீனு. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

எனினும் நயன்தாரா ‘தனி ஒருவன்’, ‘மாஸ்’, ‘இது நம்ம ஆளு’, ‘நானும் ரவுடிதான்’, ’மாயா’, ’கஷ்மோரா’ என தமிழில் மட்டும் 6 படங்கள், மலையாளத்தில் ‘பாஸ்கர் த ராஸ்கல், தெலுங்கில் ’டிக்டேட்டர் ’ என பிசியாக இருப்பதால். அவரிடமிருந்து பதில் ஏதும் இன்னமும் வரவில்லை. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close