Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசியல் கதையுடன் களமிறங்கும் சுந்தர்.சி!

’கலகலப்பு’, ‘மத காஜ ராஜா’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘அரண்மனை’ மற்றும் ‘ஆம்பள’ என தொடர்ச்சியாக ஹீரோ கேரக்டரை ஒத்திவைத்து விட்டு இயக்கத்தில் சற்று அதிகமாக கவனம் செலுத்தினார். ‘அரண்மனை’ படத்திலும் குணச்சித்திர ரோலிலேயே நடித்திருப்பார். 

தற்போது மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் திட்டத்தில் இருக்கும் சுந்தர்.சி மலையாளத்தில் ஹிட்டடித்த ‘வெள்ளிமூங்கா’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார். முழுமையான அரசியல் படமான இதில் 40 வயது அரசியல்வாதியாக சுந்தர்.சி நடிக்க இருக்கிறார். 

ஒரு அரசியல்வாதி, தனது அதிகாரத்தை எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்துகிறார், எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார். மேலும் பெண் ஆசை என சுந்தர்.சி இந்த படத்தில் ஆண்டிஹீரோவாக நடிக்க இருக்கிறார். பல ஹீரோக்களும் தற்போது வில்லன் பாணி ஹீரோ படங்களை ஆர்வத்துடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது என்ற நிலையில் சுந்தர்.சியும் தற்போது அதே பாணீயை கையில் எடுத்துள்ளார். படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

அதே போல் ‘மங்காத்தா’, ‘சூது கவ்வும்’, ‘என்னை அறிந்தால்’, என ஹீரோக்கள தங்களை வயது சற்று கூடுதலாக காட்டும் படங்கள் மக்களிடம் வரவேற்பு பெற்று வருகின்றன என்பதால் இந்த படத்திற்கும் ஆதரவுகள் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close