Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ரீதேவிக்கு முத்தமிட்டாரா சுதீப் ?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத். 

தற்போது படப்பிடிப்புகள் கேரளா மாநிலத்தின் மலைபகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் ஸ்ரீதேவி சுதீப்பை முத்தமிடும் காட்சி இருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவ துவங்கியது. 

இதற்கு பதில் அளித்துள்ள சுதீப். எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இப்படி முத்தமிடும் காட்சிகள் ஏதும் இல்லை. எப்படி இப்படியெல்லாம் வதந்திகளை பரப்புகிறீர்கள் என கேட்டுள்ளார். அதே போல் இந்த படத்தில் விஜய் மூன்று கெட்டப்களில் நடிக்கிறார் எனவும் வதந்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போது விஜய்க்கு இதில் இரண்டு வேடமே என உறுதியாகியுள்ளது. படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் சதுரங்கவேட்டை பட நாயகன் நட்ராஜ். படத்தில் பல காட்சிகள் மலைப்பகுதிகள் மற்றும் காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close