Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிருத்தா? ஜி.வி.பிரகாஷா? - அஜித் படத்தின் இசையமைப்பாளர் யார்

’வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படம் உருவாக உள்ளது. அஜித்தின் 56வது படமான இந்த படம் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாக உள்ளது. 

இந்நிலையில் படத்திற்கு இசை அனிருத் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதில் மாற்றங்கள் உண்டாகியுள்ளன. படத்திற்கு இசையமைப்பதற்காக அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

எனினும் அனிருத்திடம் சரியான பதில் வராததாக கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழு கொலவெறி இசையமைப்பை வேண்டாம் என நிராகரித்துவிட்டு, டார்லிங் இசையமைப்பை உள்ளே கொண்டு வர திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

தற்போது ஷாலினி கர்ப்பமாக இருப்பதால், அஜித் சினிமாவுக்கு சற்றே ஓய்வு கொடுத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. அஜித்தின் வருகைக்கு பிறகு ஏப்ரல் முதல் படப்பிடிப்புகள் துவங்க உள்ளன. எனினும் இப்போது இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு சரியான பதில் இன்னமும் கிடைத்த பாடில்லை. 

’கிரீடம்’ படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த படத்திற்கும் அவர்தான் இசை எனில் 8 வருடங்கள் கழித்து இந்த கூட்டணி என்றே கூறலாம். அதிலும் அப்படத்தின் பாடல்களான ‘ அக்கம் பக்கம்’, மற்றும் ‘டிங் டாங்’ பாடல்கள் இப்போதும் மெலடி மெட்டுக்களாக பல சேனல்களில் ஒலித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close