Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’புலி’ படத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன் குரல்களில் பாடல்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதி ஹாசன், சுதீப், தம்பி ராமையா, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத்.

வரும் படங்கள் அனைத்திலும் விஜய் ஒரு பாடல் பாடி வரும் நிலையில் தற்போது இந்த படத்திலும் ஒரு பாடல் பாடவிருக்கிறார் . ‘துப்பாக்கியில்’ படம் மூலம் மீண்டும் துவங்கிய இந்த ரீஎண்ட்ரி பாடகர் அவதாரம் தொடர்ச்சியாக ‘தலைவா’, ’ கத்தி’ என இவர் பாடிய அனைத்து பாடல்கள் ஹிட்டடித்து வருகின்றன. 

 

தற்போது ‘புலி’ படத்தில் விஜய் பாடப் போகிறார் மேலும் ஸ்ருதியுடன் இணைந்து பாடப்ப்போகிறார் என்பதே சிறப்பான செய்தி.

இருவருமே சிறந்த பாடகர்கள். இருவரையும் வைத்து டூயட் பாடலை பாட வைக்க வேண்டும் என்பது சிம்புதேவன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் விருப்பம். விஜய்யும் அவர்களின் விருப்பத்துக்கு ஓகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. புலியின் ஆடியோ உரிமையை சமீபத்தில்தான் சோனி மியூஸிக் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close