Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘நான் பொண்ணு இல்ல; பொம்பள!’’ - 007 நாயகி மோனிகா பெலுச்சி!

ஹாலிவுட்டில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல் நடித்துவிட்ட மோனிகா பெலுச்சிக்கு 50 வயது என்றால் நம்பமாட்டீர்கள். ஜேம்ஸ்பாண்ட் டேனியல் கிரெய்க் நடிக்கும் ‘ஸ்பெக்ட்ர்’ படத்தில் மோனிகாதான் ஹீரோயின். சோனி கம்பெனி ஹாக்கிங் செய்யப்பட்டு கதை லீக் ஆனதால், படம் பாதியில் நிறுத்தப்பட்டது; ஜாகுவார், ஆஸ்டன் மார்ட்டின் போன்ற சூப்பர் கார்கள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு மூலையில் முடக்கம் என்று ஏற்கெனவே செம ஹைப்பில் இருக்கும் ‘ஸ்பெக்ட்ர்’ படம், மறுபடியும் செம ஹாட்டாக ஆரம்பிக்கப்பட்டு விட்டது. காரணம், ஹாட் ஹீரோயின் மோனிகா பெலுச்சி.



ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வழக்கமாக வரும் ‘டேம் ஜூடி டென்ச்’ ஆயா கேரக்டருக்குப் பதிலாக, திடீரென ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் மோனிகா. ‘ஆனால், ஜூடி டென்ச்சுக்கு வயது 80. எனக்கு எப்படி இந்த கேரக்டர் செட் ஆகும்?’ என்று மோனிகா விழி பிதுக்க, ‘‘நீங்கதான் ஹீரோயின்!’’ என்று ஜூடி டென்ச் கேரக்டரை ஹீரோயின் கேரக்டராக்கி விட்டாராம் படத்தின் இயக்குநர் சாம் மாண்டிஸ்.

மோனிகாவின் ஸ்பெஷல் என்னவென்றால், செக்ஸ் காட்சிகளில் இயல்பாக நடிப்பதுதான். அதேபோல், அங்கங்களைப் பராமரித்து அழகு கூட்டும் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’க்கு எதிரானவர் மோனிகா. ‘‘ஹால்லி பெர்ரி, ஈவா கிரீன், ஜெம்மா ஆர்டெர்டான் வரிசையில் மோனிகா பெலுச்சியும் இப்போது பாண்ட் கேர்ள் ஆகிவிட்டார்!’ என்று பத்திரிகைகளில் தடதட செய்தி வர, அதை தன்னடக்கமான கோபத்துடன் மறுத்திருக்கிறார் மோனிகா.



‘‘எனக்கு 50 வயது ஆகிவிட்டது. இது வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். இன்னும் நான் பொண்ணு கிடையாது. நான் இப்போது ஒரு மெச்சூர்டான பெண். வயது ஆக ஆக ஒரு பெண்ணுக்கு மரியாதைதான் கிடைக்கும் என்பதை பெண்கள் புரிந்து கொள்ளத் தயங்குகிறார்கள். இது புரியாமல், பெண்கள் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து தங்கள் அழகைப் பாழடிக்கிறார்கள். என் முகத்தில் சுருக்கங்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் இனிமேல் என்னை இளமையாகக் காட்டிக்கொள்ள விருப்பம் இல்லை. எனவே, தயவுசெய்து என்னை ‘கேர்ள்’ என்று எழுத வேண்டாம்; ‘பாண்ட் லேடி’ என்றே சொல்லுங்கள்... ப்ளீஸ்..!’’ என்று பத்திரிகைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ‘பாண்ட் பொம்பள!’

வயதைக் குறைத்து வாலிபம் கூட்டும் நடிகைகள் கவனிக்க!



- தமிழ் -

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close