Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விமல் , நந்திதா நடிக்கும் ‘அஞ்சல’ படத்தின் கதை!

‘டீ’ கடைகள் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பதில் ஒரு சிறப்பிடத்தை பிடித்துள்ளது. சென்னை கோட்டை முதல் டெல்லி செங்கோட்டை வரை ‘டீ’ கடைகள் தலைப்பு செய்திகளாய் திகழ்ந்து வருகிறது. முழுக்க முழுக்க ‘டீ’ கடையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் ‘ அஞ்சல’. இயக்குநர்கள் ரத்ன குமார், மூர்த்தி மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த தங்கம் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன. 

யமஹா ஷோரூம் வைக்கும் லட்சியத்துடன் உழைக்கும் மெக்கானிக்காக விமல், கல்லூரி மாணவியாக நந்திதா நடிக்கிறார்கள். பசுபதி ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் இமான் அண்ணாச்சி, ஆடுகளம்’ முருகதாஸ், சுப்பு பஞ்சு இவர்களுடன் ‘டீ’ கடை மிக முக்கியமான பாத்திரத்தில் இடம்பெற உள்ளது.

தனது ஃபார்மர்’ஸ் மாஸ்டர் ப்ளான் புரோடக்ஷன் சார்பில் திலிப் சுப்புராயன் இப்படத்தை தயாரிக்கிறார். " ஒரு நாள் தற்செயலாக ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனிடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே இப்படத்தை தானே தயாரிக்க முன் வந்தார். திலிப் சுப்புராயன் பிரபல சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.”

“சூப்பர் சுப்புராயன் சண்டை பயிற்சியினை மேற்கொள்ள ஒளிப்பதிவாளர்கள் KV குகன் மற்றும் சௌந்தர்ராஜன் அவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய , பிரவின்.K.L படத்தொகுப்பை கையாள,எம்.ஜி. முருகன் கலை இயக்கத்தை கவனிக்க, ’உஸ்தாத் ஹோட்டல்’, ’பெங்களூர் டேஸ்’ திரைப்படங்களுக்கு இசையமைத்த கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  நம் வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கவிருக்கும் அன்றாட நிகழ்வுகளின் கோர்வையே அஞ்சல’. பட[ப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறியுள்ளார் அறிமுக இயக்குனர் தங்கம் சரவணன்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close