Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமரன் பார்ட் 2?

1995ல் வெளியான படம் ‘அமரன்’ கார்த்திக் நடிப்பில் , வெளியான த்ரில்லர் ஆக்‌ஷன் படம். கார்த்திகுடன் பானுப்ரியா, ராதாரவி, விஜயகுமார், ஷம்மி கபூர், பிரதாப் போத்தன், மஞ்சுளா விஜயகுமார், சில்க் நடிப்பில் ரஜேஷ்வர் இயக்கத்தில் வெளியான படம். 

அந்த படத்தில் கார்த்திக் ‘வெத்தல போட்ட ஷோக்குல’ என அவரது தனித்தன்மை வாய்ந்த குரலில் பாடி அசத்தியிருப்பார். தற்போதும் அப்படியே வயது தெரியாமல் இருக்கும் கார்த்திக் ‘அனேகன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது புதிய திட்டத்தில் இருக்கிறார். 

 

அதுதான் அமரன் பார்ட் 2. இது குறித்து முதல் பாகத்தை இயக்கிய ராஜேஷ்வருடன் பேச்சுவார்த்தை நடப்பாக கூறப்படுகிறது. விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.  ராஜேஷ்வர் இயக்கிய ‘இதயத்தாமரை’ என்ற படத்திலும் கார்த்திக் தான் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ராஜேஷ்வரின் ஆஸ்தான நாயகன் கார்த்திக் என்பதால் இந்த படம் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close