Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்- ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

அஜித் மற்றும் ஷாலினி தம்பதிக்கு இன்று காலை 4.30 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

’அமர்க்களம்’ படத்தில் காதலர்களாக நடித்த அஜித்-ஷாலினி ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் காதலித்து கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. அவர் பெயர் அனௌஷ்கா.


இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாலினி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 4.30 மணியளவில் அஜித்-ஷாலினி தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ரசிகர்கள் வெல்கம் குட்டித் தல என செல்லமாக டிரெண்ட் செட் செய்து கொண்டாடி வருகின்றன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close