Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரட்டை வேடத்தில் அனுஷ்கா!

அனுஷ்கா நடிப்பில் ‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’ ஆகிய இரண்டு பிரம்மாண்டமான படங்கள் வெளியாகவுள்ளது. இவ்விரு படங்களும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.இதனையடுத்து ஆர்யாவுடன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக உள்ளது. 

 மாஸ்டர் பரத், ஊர்வசி முக்கிய ரோலில் நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரகாஷ் கோவேல முடி இயக்குகிறார். இவர் தெலுங்கு உலகின் பிரபல இயக்குநரான ராகவேந்திர ராவின் மகன். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.

இப்படம் நடிகைகள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் நிலவும் ஜீரோ சைஸ் என்ற ஒல்லிபிச்சான் கலாச்சாரம் பற்றிய கதையம்சம் உள்ள படமாக உருவாகிறது. இதில் அனுஷ்கா உடல் எடை அதிகம் உள்ள கேரக்டரிலும் உடல் மெலிந்த கேரக்டரிலும் என இரு கெட்டப்களில் தோன்றுகிறாராம். படத்திற்கும் பெயர் ‘சை ஸ்ரோ’ என வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close