Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

40 கோடிக்கு விலை போன சிவகார்த்திகேயன் படம்?

துறை செந்தில் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , ஸ்ரீதிவ்யா, பிரபு, இமான் அண்ணாச்சி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 27ம் தேதி வெளியான படம் ‘காக்கி சட்டை’ . படத்திற்கு இசை அனிருத். ஒரு பக்கம் ஆக்‌ஷனுக்குரிய அத்தணை அம்சங்களும் உள்ளன.

சிவகார்த்திகேயன் அடுத்த ஸ்டெப் என ஒரு தரப்பு கூறினாலும், மற்றொரு தரப்பு பழைய கதைதான், அதே பாணி ஆக்‌ஷன் சீன்கள், காமெடி, ஆக்‌ஷன் என இரண்டிலும் சற்று அரைகுறை என்பது போல் கலவையான விமர்சனங்கள் உருவாகியுள்ளன. சரி பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எப்படி என விசாரித்தபோது, நடந்துவரும் உலக கோப்பை, தேர்வுகள் என கலெக்‌ஷனிலும் சற்று மந்த நிலை நிலவிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘காக்கி சட்டை’ ரிலீஸ் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடிக்கும் ’ரஜினி முருகன்’ படம் 40 கோடிக்கு விலை போயுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close