Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா - ஏன் இந்த வைரல் மோகம்!

சமீப காலமாக சமூகவலைகள், பல அங்கீகாரம் இல்லாத சைட்டுகள் என தங்களது நலனில் மட்டுமே அக்கரைக் கொண்டு சினிமா, அரசியல் செய்திகள், கருத்துகள், துவங்கி தகவல்கள் என பொய்யான விஷயங்களை அதிகம் பரப்ப துவங்கிவிட்டனர். 

உதாரணத்திற்கு ஒரு படம் வெளியானால், படம் பார்த்துவிட்டு கருத்து தெரிவிப்பவர் 4 பேர் என்றால் செவிவழிச் செய்தியை வைத்தே படம் குறித்து கருத்து தெரிவிப்போர் இருமடங்காக பெருகி வருகின்றனர். பல இயக்குநர்களும் தங்களது படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள், விமர்சனம் ஏன் செய்கிறீர்கள். விமர்சனம் செய்வதற்கு இணையங்கள், புத்தகங்கள் உள்ளன என சீறிப்பாய துவங்கிவிட்டனர். 

 இதுகுறித்து சமீபத்தில் தம்பி ராமையாவும், புகழ்  வருகையில் ஏற்றுக் கொண்டுவிட்டு விமர்சனம்  வரும்போது மட்டும் ஏற்றுக் கொள்ளாமல்  இருந்தால் எப்படி என கேட்டவர், மேலும்  விமர்சனம் செய்ய சினிமா அறிவு சிறிதேனும்  வேண்டும், ஆனால் கருத்து தெரிவிப்பது அவரவர்  விருப்பம். அதில் நாங்கள் தலையிடவில்லை. என  கூறியுள்ளார். 

 இது ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயமே.  எல்லாம் சரி முதலில் கேமரா ஆங்கிள்கள்,  லைட்டிங் என எவ்வளவோ சினிமாவில் சாதாரண  மக்களுக்கு தெரியாதவைகள் இருக்கத்தான்    செய்கின்றன. சினிமா விமர்சனத்தை விடுங்கள்.  இப்போதெல்லாம் சில தகவல்கள் கூட ரசிகர்கள்  என்ற பெயரில் தவறான செய்தியாக சமூக  வலைகள் மூலம் பரவி வருகின்றன. 

 உதாரணத்திற்கு அஜித்துக்கு பிறந்த குழந்தை என  தற்போது இணையத்தில் சுற்றிவரும் புகைப்படம்.  அது பொய்யான போட்டொவென அஜித்துக்கு நெருங்கிய வட்டாரங்களே உறுதி செய்தபோதும் இன்னமும் சுற்றலில் இருந்து வருகிறது. அடுத்து விஜய் கையில் அஜித் குழந்தை என நெட்டில் சுற்றிவரும் போட்டோ ஷாப் புகைப்படங்கள். பின் பாலசந்தர் மறைவின் போது ஷூட்டிங்கிற்காக அஜித் வட இந்தியாவில் இருந்த வேளையில் அவர் கே.பி இறுதி அஞ்சலிக்கு வந்தார் என புகைப்படங்கள் பரவின. இது போதாது என அடுத்து நயன்தாரா பீர் வாங்கிய வீடியோ பிரச்சனை. அதற்கு ப்ரியா ஆனந்த், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கண்டனம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

இதே போல் சமந்தா உள்ளாடை விளம்பரத்தில் நடிப்பதாகவும் 6 கோடி அதற்கு சம்பளம் எனவும் கூட பரவியது. பின் நெட்டில் சமந்தா, டாப்சி இருவரும் இவர்களெல்லாம் செய்திகளை வேற்று கிரகத்தில் இருந்து போடுகிறார்கள் போல என கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் என்பதற்காக தவறான செய்திகள் ஏன் என்ற கேள்வியே தற்போது சினிமா வட்டாரங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இது ஒருபக்கம் அவர்களது அன்பின் வெளிப்பாடு என்றாலும், ஒரு வகையில் சம்மந்தப்பட்ட நடிகரின் சொந்த வாழ்கைக்கே ஆபத்தாக முடியும் என்பதை ஏன் நாம் உணர்வதில்லை. இணையவாசிகள் தற்போதெல்லாம் தாங்களின் நலனை காண்கிறார்களே தவிர அடுத்தவரின் நலனைக் காண்பதே இல்லை என்பதே வேதனையான உண்மையாகியிருக்கிறது. 

அஜித் குழந்தை என சுற்றிவரும் புகைப்படம் .இது உண்மையான படமல்ல

ஒரு மனிதன் ஏதோ ஒரு ஆபத்தில் சிக்கியிருந்தால் கூட அதைப் பொருட்படுத்தாது மொபைலில் பதிவு பண்ணி வைரலாக்கும் எண்ணம் தான் அதிகமாகிப் போனது. இப்படியே சென்றால் ரோட்டில் ஒரு மனிதன் உயிருக்கு போராடும் வேளையில் கூட அதை படம் பிடிக்கும் அளவிற்கு நம் மனது கல்லாகும் காலம் வரும் என்பதை விட வந்துவிட்டது என்பதே மெய். 

- ஷாலினி நியூட்டன் - 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close