Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

த்ரில்லர், கருப்பு பணம் அடுத்தடுத்து கமல் படங்களின் தீம்!

விஸ்வரூபம்’ படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. கமல் ஹாசன் படம் வாராதா என ஏங்கிய ரசிகர்களுக்கு விருந்தாக இந்த வருடம் ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம் 2’ என மூன்று படங்கள் வெளியாக உள்ளன. ஏற்கனவே ‘உத்தம வில்லன்’ படத்தின் இரண்டு டிரெய்லர்கள், பாடல்கள் வெளியாகி இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது. 

இந்நிலையில் கமலின் அடுத்த படத்தை பிரபுதேவா இயக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் அடுத்த படம் முழுநீள த்ரில்லர் படமாக கமலே தயாரித்து , இயக்க உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே போல் முழுநீள இந்தி படம் ஒன்றிலும் நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம். 

இதற்காக சமீபத்தில் இந்தியின் பிரபல தயாரிப்பாளர்கள் விரேந்தர் அரோரா, அர்ஜுன் கே கபூர் இருவரிடமும் கதை சொன்னதாகவும் அவர்களுக்கு கதை பிடித்துவிட்டதால் தொடர்ச்சியாக இந்தி பட வேலைகளையும் ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் கதை அரசியல் , கருப்பு பணம் சார்ந்த கதையாம்.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close