Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர் தர்ணாவில் கவிஞர் தாமரை!

கணவரை சேர்த்து வைக்க கோரி, கடந்த வெள்ளி பிப்ரவரி 27 ஆம் தேதி   காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கிய கவிஞர் தாமரை, ஐந்தாவது  நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்கிறார்.

வேளச்சேரி வீட்டில் இருந்து அவரது கணவர் தியாகு தலைமறைவானதால், இன்று முதல் தனது போராட்டத்தை கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள பூங்கா அருகில் தனது போராட்டத்தை நடத்தி வந்தார் தற்போது இரண்டு மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டத்தை தொடர்ந்துள்ளார்..7வது படிக்கும் மகனுடன் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கும் தாமரை  தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார் . மேலும் தாமரைக்கு ஆதரவாக பலரும் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். 

பத்திரிகையாளர்கள் ஞானி சங்கரன் இது குறித்த வெளியிட்ட அறிக்கையில், தனது தனிப்பட்டபிரச்சினையை தமிழ் தேசிய வாதம், பெரியாரிஸம், மார்க்சியம் என்பவற்றோடு குழப்பிக் கொள்வதில் நியாயமில்லை. என்ற ஒரு கருத்து, பொது வாழ்வில் இருக்கும் இருவரின் குடும்பப் பிரச்சினை பற்றிய கருத்துகளில் பலரால் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. எனக்கு எழும் கேள்வி இதுதான்: அப்படியானால் எந்த அரசியல் தத்துவத்துக்கும் தனி மனித வாழ்க்கை நடத்தைக்கும் தொடர்பே இருக்கத் தேவையில்லையா? நாம் கற்கும் பயிலும் கோட்பாடுகள் தத்துவங்கள் நம் தனிவாழ்க்கைக்கானவை இல்லையா? தனிவாழ்க்கை வேறு ? கொள்கை வேறா ?

மாலதி மைத்ரி கூறுகையில், கவிஞர் தாமரை தான் மணவாழ்க்கையில் ஏமாற்றப்பட்டது பற்றியும் தன் குழந்தையைத் தன் கணவரான தியாகு கைவிட்டு சென்றது பற்றியும் அரசியல், சமூகப்பணியில் ஈடுபட்டுள்ள, நம்பிக்கை வைத்துள்ள அனைவரிடமும் நீதி கேட்கிறார். தான் பிரிந்து  தனியாக வாழ்வது பற்றித் தனக்குக் கவலையில்லை என்றும் தன் மகனை வளர்க்கும் பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளும் தியாகு அவர்களின் முயற்சி கயமையானது என்றும் அவர் சொல்கிறார். இதனை பொது வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் ஒருவர் திருமண உறவுக்குள் வருவதும் பிரிவதும் பிரச்சனையல்ல. குழந்தை பெற்றுக்கொள்வதும் பின் அக்குழந்தையை முழுமையாகப் பெண்ணின் பாராமரிப்பில் விட்டுவிட்டு தப்பித்துச் செல்வதும் இழிவான தந்திரம். குழந்தையைப் பராமரிப்பது ஆண் பெண் இருவரின் சமூகக் கடமை, தனது குழந்தையைக் காப்பாற்ற மனமற்ற, பொறுப்பற்ற ஒருவர் மக்களுக்கான சமூகநீதியை அரசு அதிகாரத்திடம் கேட்பதில் என்ன நியாயமிருக்க முடியும்?  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close