Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜித்துக்கு கழுத்தில் லாக்கெட் , சூர்யாவுக்கு காதுல ஊக்கு - வெங்கட்பிரபுவின் மாஸ் அப்டேட்!

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், ஜெயராம், சமுத்திரக்கனி, வித்யுலேகா உட்பட பலர் நடித்துவரும் படம் ‘மாஸ்’. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. சமீபத்தில் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. 

த்ரில்லர் ஹாரரான இப்படத்தின் முதல் போஸ்டரில் மிகவும் கோவமாக இருந்த சூர்யா அடுத்த போஸ்டரில் ஜாலியாக, கூலர் சகிதமாக போஸ் கொடுத்ததோடு கலர்ஃபுல் போஸ்டராக வெளியாகியுள்ளது. 

வெங்கட்பிரபு படம் என்றாலே ஹீரோக்களின் ஸ்டைலில் சற்றே அக்கறை அதிகமாக இருக்கும். ’மங்காத்தா’ படத்தில் அஜித் கழுத்தில் வித்யாசமான லாக்கெட் ஒன்றை பயன்படுத்தியிருப்பார். அதை வைத்தே பட முடிவில் கேசையே மாற்றிவிட்டு செல்வார் அஜித். 

தற்போது மாஸ் பட போஸ்டரில் சூர்யா காதில் ஊக்கை நுழைத்தவாறு போஸ் கொடுத்துள்ளார். இதே பாணியில் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்திற்காக வித்யாசமாக கையில் பாட்டில் வாட்ச், கழுத்தில் புல்லட் என ஜி.வி.பிரகாஷ் போஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘மாரி’ படத்திற்காக தனுஷ் கண்ணாடி, சால்வை என கலக்கல் போஸ் கொடுத்திருந்தார். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்