Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரிக்கெட் வீரர் தோனியின் சொல்லப்படாத ரகசியங்கள்!

ந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தயாராகவுள்ள 'தோனி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் ஏராளமான இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் நடிக்க உள்ளனர். 

சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக வலம் வரும் இந்திய அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு, சினிமாவாக வெளிவர உள்ளது.

நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த படத்தில், தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார்.

தோனியின் கிரிக்கெட் சாதனைகள், அவர் சந்தித்த சோதனைகள்,தோனியின் தனிப்பட்ட வாழ்க்கையில் இடம் பெற்ற முக்கிய சம்பவங்கள், என இதுவரை தெரியாத சில ரகசியங்களாக மேலும் தோனியின் நெருங்கிய நண்பர்களை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு, தனது முக்கிய உடல் மொழி, அங்க அசைவுகள் குறித்து தோனி சில விஷயங்களை பற்றி பாடம் எடுத்தார்.

இந்நிலையில், சில இந்திய கிரிக்கெட் வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக இயக்குநர் நீரஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வீரர்களின் பெயர்களை இப்போது வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்திய அணியின் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தொடர்ந்து மும்பை,சென்னை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் படப்பிடிப்புகள் நடைபெறுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close