Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாடகராக கெளதம் மேனன்!

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “உப்புக் கருவாடு” இப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

அஜித்துடனான “என்னை அறிந்தால்” படம் மெகா ஹிட் அடித்த நிலையில் அடுத்தப் படமாக சிம்புவை வைத்து “அச்சம் என்பது மடமையடா” படத்திற்கான வேலைகளில் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார் கெளதம்.

“பொன்னியின் செல்வன்”, “அபியும் நானும்”,“பயணம்”,“கெளரவம்” போன்ற படங்களை இயக்கியவர் ராதாமோகன். தற்பொழுது “உப்பு கருவாடு” என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் கருணாகரன், நந்திதா, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்திற்கு பாடல் பாட கெளதம் மேனனை அழைத்திருக்கிறார் ராதாமோகன். அவரும் சம்மதம் தெரிவிக்க ஒரு பாடலையும் பாடியுள்ளார் கெளதம்.

‘புது ஒரு கதவு திறக்குது’ என்ற மதன் கார்க்கி வரிகளில் உருவான பாடலை, ஸ்டீவ் வத்ஸ் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைக்க கெளதம் மேனன் பாடியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close