Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 கோடி செலவில் விக்ரம் பாடல் - ஒரு பாடலுக்கு சார்மி!

’கோலி சோடா’ இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் , சமந்தா நடித்துவரும் படம் ’பத்து எண்றதுக்குள்ள’. ‘ஐ’ படத்தின் மேக்கிங்கில் 4 வருடங்களை செலவிட்ட விக்ரம் அந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு நடித்துவரும் படம் இது. இந்த படமும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவருகிறது.

படப்பிடிப்புகள் முடியும் தருவாயை எட்டியுள்ளன. இந்த படத்திற்காக சார்மி ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கு மட்டும் 3 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர் படக்குழுவினர். ‘ஐ’ படம் போன்ற பிரம்மாண்ட படத்தில் நடித்த விக்ரம் படம் என்கையில் இந்த செலவு ஆச்சர்யம் இல்லை என்று கூறப்படுகிறது.

 

எனினும் இயக்குநர் விஜய் மில்டன் முந்தைய படமான ‘கோலி சோடா’வை மிகக்குறைந்த செலவில் கொடுத்துவிட்டு இந்த படத்தில் பெரிய ஹீரோ என்றதும் பிரம்மாண்ட செலவா என கேட்கவும் தோன்றுகிறது. மேலும் சார்மிக்கு சம்பளமும் 30 லட்சம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இப்பாடலுக்கு இசை இமான். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close