Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தயாரிப்பாளர் என்னை மிரட்டுகிறார் - வினய்!

’உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் வினய். தொடர்ந்து ‘ஜெயம் கொண்டான்’, ’மோதி விளையாடு’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.  தற்போது இவர் நடித்த ‘சேர்ந்து போலாமா’ படம் வரும் 6ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்திற்காக தனக்கு பேசிய சம்பளம் தரவில்லை எனவும் கேட்டால் முடிந்ததை செய் என தயாரிப்பாளர் மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நியூசிலாந்தில் நடைபெற்றது. அப்போது, வினய் தனது சம்பளத்தின் பாக்கி தொகையான 17 லட்சம் ரூபாயை உடனே தர வேண்டும் என்று கேட்டு படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக தென்னிந்திய நடிகர் சங்கத்திலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பட தயாரிப்பாளர் சசி நம்பீசன் புகார் செய்துள்ளார். 

இதுகுறித்து வினய்கூறியுள்ளதாவது ஒப்பந்தத்தின்படி, எனக்கு தயாரிப்பாளர் சசி நம்பீசன் ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்னையில், நடிகர் சங்க செயலாளர் ராதாரவி தலையிட்டு, என் சம்பளத்தில் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை விட்டுக் கொடுக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, நானும் அந்த தொகையை விட்டுக் கொடுத்துவிட்டேன். மீதி 4 லட்சத்து 50 ஆயிரத்தை தருவதாக முன்பு ஒப்புக் கொண்ட தயாரிப்பாளர் சசி நம்பீசன், இப்போது ‘அந்த தொகையையும் தர முடியாது. உன்னால் முடிந்ததை செய்னு மிரட்டுகிறார். இதுபற்றி நான் நடிகர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close