Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அருள்நிதிக்கு நிச்சயதார்த்தம் - இந்த வருட இறுதிக்குள் திருமணம்!

திமுக தலைவர் கருணாநிதியின் இளைய மகனான மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மகள் கீர்த்தனாவை திருமண செய்யவிருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் திங்கட்கிழமை நடைபெற்றது.

பாண்டிராஜின் ‘வம்சம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அருள்நிதி. தொடர்ந்து ‘மௌனகுரு’, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’  உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்‘, ‘டிமாண்டி காலணி’ ஆகிய படங்கள் வெளிவரவிருக்கிறது.

இந்நிலையில் அருள்நிதிக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இவர், முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் கீர்த்தனாவை மணக்கவிருக்கிறார்.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இரு குடும்பத்தாரும், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதுகுறித்து அருள்நிதி கூறுகையில், இந்த வருட இறுதிக்குள் திருமண தேதி முடிவாகிவிடும். அதற்குள் எனது சில கமிட்மெண்டுகளையும் முடித்துவிடுவேன். எங்களது திருமணம் வீட்டில் ஏற்பாடு செய்து நடக்கிறது என கூறியுள்ளார் அருள்நிதி.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close