Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புரோகிதர்... பாடிபில்டர்... அப்புறம் சினிமா ஹீரோ!

’யாளி’ திரைப்படத்தின் படபூஜை முடிந்த நிலையில் பலரையும் ’வாவ் வாட்ட மேன்’ என சொல்ல வைத்திருக்கிறது அந்த திரைப்படத்தின் படபூஜை ஸ்டில்ஸ். 


என்னது படபூஜை ஸ்டில்ஸ் கூட ’வாவ்’ சொல்ல வைக்குமா? என்பதுதானே உங்கள் கேள்வி. இந்த கேள்வியின் நாயகன் ’ரகுராமன்’! சிக்ஸ்பேக்கில் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர், படத்திற்கு பூஜை போட்டுக் கொண்டிருக்கும் புரோகிதர். இவர் உண்மையிலேயே புரோகிதர்தானா என்கிற சந்தேகம் எழ ரகுராமனிடம் பேசினோம்.

‘’நம்புங்க நான் புரோகிதர்தான்.அதே நேரத்துல இதுவரைக்கும் ரெண்டு தடவை மிஸ்டர் தமிழ்நாடுவா செலக்ட் ஆகி இருக்கேன்’’என மேலும் ஆச்சரியம் கூட்டியவர், ‘'26 வயசு வரைக்கும் ரொம்ப ஒல்லிக்குச்சிப் பையனா இருந்தேன்.என்னைப் பாத்து நிறைய பேரு கிண்டல் பண்னினாங்க.அப்பெல்லாம் மனசு ரொம்ப வெறுத்துடும். இதுக்காகவே உடம்பை ஏத்தணும்னு மனசுக்குள்ள  வைராக்கியம் வந்துச்சு.என்னோட எடை வெறும் 42 கிலோதான். தினமும் சத்தான ஆகாரங்களை சாப்பிடணும்னு முடிவு செஞ்சு கீரை, காய்கறிகள் பழங்கள் நிறைய எடுத்துக்கிட்டேன்.அசைவம் சாப்பிட்டாதான் உடம்பை ஏத்த முடியும்னு சொல்றதெல்லாம் உண்மையில்ல. உருளைக்கிழங்கு,சர்க்கரைவள்ளிக் கிழங்கு,  சோயாபீன்ஸ் இதையெல்லாம் தினசரி உணவுல சேத்துக்குறதோட, சரிவிகிதமான உணவை சாப்பிட ஆரம்பிச்சேன்.

மதிய வேளையில தினமும் ஜிம்முக்கு போயி உடற்பயிற்சி செய்வேன். அதென்ன மதிய வேளைனு கேக்குறீங்களா? காலையிலயும் மாலையிலயும் பூஜைக்குப் போயிடுவேன். நடுவுல இருக்குற ஓய்வு நேரத்துலதான் உடற்பயிற்சி செய்ய முடியும். மதியத்துல உடற்பயிற்சி பண்ணாலும் ஃபிட்ஸ் ஆக முடியும்னு என் மூலமா தெரிஞ்சுக்கலாம். ஒரு வழியா என்னோட இந்த முயற்சிகளால எண்ணி 3 வருஷத்துல இப்டி சிக்ஸ்பேக் சாமியா மாறிட்டேன். இப்போ என்னோட வயசு 29. வெயிட் 67 கிலோ.எப்பூடி?’’ என கலகலவென சிரித்துவிட்டு தொடர்கிறார், ரகுராமன்.

‘’நான், 4வது வரைக்கும்தான் படிச்சேன். 16 வயசு வரைக்கும் வேதம் படிச்சேன். கிரகப்பிரவேசம், கல்யாணம் இதுக்கெல்லாம் மந்திரம் ஓதுறதுதான் என்னோட முதன்மையான தொழில். பூஜை நேரம் போக மத்த நேரங்கள்ல ஃபிட்ஸ்னெஸ் பயிற்சி வகுப்பும் எடுக்குறேன். 2014 ல் தமிழ்நாடு பாடி பில்டர்ஸ் அசோஸியேஷன் நடத்துன ஃபிட்னெஸ் போட்டிகள்ல ஆணழகன் ஆனது பலரையும் திரும்பிப் பாக்க வச்சது.

வாய்ப்பு கிடச்சா சினிமாவுல நடிக்கவும் ஆசை இருக்கு. நிறைய பொண்ணுங்க என்னைப் பாத்து ’விக்ரம்'னு சொல்லி மெர்சலாகி இருக்காங்க. பாருங்க எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்’’என ஆம்ஸ் காட்டுகிறார் ரகுராமன்.

-பொன்.விமலா

MUST READ

எடிட்டர் சாய்ஸ்