Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“சீக்கிரம் எழுந்து வாருங்கள் கிஷோர்!” வருந்தும் செழியனின் உருக்கமான கடிதம்..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எடிட்டர் கிஷோர் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலகினரும், ரசிகர்களும் வேண்டி வரும் நிலையில் ஒளிப்பதிவாளர் செழியன் தன்னுடைய சமுக வளைதளத்தில் பதிவிட்ட வரிகள் இதோ!..

“ஆடுகளம் படத்தின் இடைவேளைக்கு முந்திய காட்சிகளைப் பார்த்து வியந்து எடிட்டர் யார் என்று தேடியபோதுதான் கிஷோர் என்கிற பெயர் எனக்கு அறிமுகம்.பரதேசி படத்தில் நேரில் அறிமுகமானோம்.அவரது எளிமையும் யாரிடமும் அன்புடன் பழகுகிற தன்மையும், நல்ல சினிமா குறித்த தொடர்ந்த தேடலும், எந்தப்படம் குறித்தும் தனக்கு தோன்றுகிற விஷயம் குறித்து வெளிப்படையாகப் பேசுகிற தன்மையும்,யாருக்கும் உதவுகிற அவரது அன்பும் எனக்குப்பிடிக்கும்.

பரதேசி படத்திற்காக 'பி ஸ்டுடியோ'அலுவலகத்தில் ஒரு எடிட் ஸ்டுடியோ உருவாக்கினார்.படத்தொகுப்பு செய்வதற்காக தினமும் வருவார். உணவு இடைவேளையில் நாங்கள் இருவரும் பலவகையான திரைப்படங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்போம்.

'எடிட்டிங் எனக்குப்பிடிச்ச விஷயம் கிஷோர்' என்று சொன்னேன். உங்க கிட்ட மேக் புக் இருக்குல்ல சார் என்ரு சொன்னவர் மறுநாள் வரும்போது Final Cut Pro Software உடன் வந்தார். அவர் உதவியாளரை வைத்து எனது லேப்டாப்பில் அதை உள்ளிட்டுக்கொடுத்து அடிப்படையான சில விஷயங்களை உடனே சொல்லிக்கொடுத்தார்.

'அது ஒண்ணும் இல்ல சார்..ரொம்ப ஈஸி..'என்று சொன்னார்.உடனே 5டி கேமராவில் சில ஷாட்கள் நான் எடுக்க அதை எப்படித்தொகுப்பது என்று கற்றும் கொடுத்தார். பணிவும் அன்பும்தான் ஒரு உண்மையான கலைஞனின் அடிப்படையான குணமாக இருக்கமுடியும்.தனக்குத்தெரிந்தது குறித்து எந்த பிரலாபமும் இல்லாமல் 'அது ஈஸிசார்..உங்க லேப்டாப் கூட வேணாம் இந்த மெஷின்லயே பண்ணிப்பாருங்க..'என்று அலுவலகத்தில் அவர் நிறுவியிருந்த மேக் கணினியில் ஒரு படத்தொகுப்பை செய்தும் காண்பித்தார்.எங்கள் இருவருக்கும் ஒருவார பழக்கம் கூட இல்லை அப்போது. இரண்டாவது நாளிலேயே அவரது செயல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.ஒரு நல்ல ஆசிரியரின் பண்பும் அதுதான்.தனக்குத்தெரிந்ததை பிறருக்கு எளிமையாகக் கற்றுத்தருவது.நான் பரதேசி படத்தின் ஒளிப்பதிவாளன் என்பதால் அவர் அதைசெய்யவில்லை. எனது உதவியாளர்கள்,உதவி இயக்குனர்களுக்கும் அவர் அதையே செய்தார்.

சில நேரங்களில் அவர் எடிட் செய்வதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் அவர் இருக்கும் அறையின் கதவைத்திறப்பேன்.கணினியின் முன்னால் இருக்கும் நாற்காலியைத்திருப்பி வேறு திசையில் அமர்ந்து கண்கள் மூடி தியானம் போல ஆழ்ந்த யோசனையில் இருப்பார்.உள்ளே யார் வருகிறார்கள் என்ற கவனம் இருக்காது.நான் கதவை மெதுவாக சாத்திவிட்டு திரும்பிவிடுவேன்.செய்கிற வேலையை அவர் நேசிக்கிற விதம் அவர்மேல் எனக்குப்பெரிய மரியாதைக் கொடுத்தது.சிலநாள் நள்ளிரவு வரை படத்தொகுப்பு செய்வார்.ஒருநாள் அதிகாலை அலுவலகத்துப் போனபோது தனியாக படத்தொகுப்பு செய்துகொண்டிருந்தார்.

'என்ன கிஷோர்..' 'ஒண்ணுமில்ல சார்..அந்த சீன்ல ரிதம் செட் ஆகல அதுதான்..'

எனக்கு படத்தொகுப்பின் ரிதம் குறித்து அவருடம் பேச விருப்பமாக இருந்தது.வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். 'அது என்ன கிஷோர்..மானிட்டருக்கு முன்னால அமைதியா இருக்கீங்களே.. அது என்ன தியானமா..யோசிப்பா..' 'சார்..சில சீன் அப்படியே வந்துரும் சார்..சில சீன்..ரிதம் செட்டே ஆகாது..' என்று பேசத்துவங்கி ஒருகாட்சியை வி.டி விஜயன் அவர்களிடம் தான் உதவியாளராக இருந்தபோது கட் கண்ணுக்குத் தெரியாமல் எப்பாடி இரண்டு ஷாட்களை இணைப்பது,ஒரு காட்சியின் அசைவும் அடுத்த காட்சியின் அசைவும் எப்படி இணையும்,ஒரு காட்சியின் அசைவில் எந்த பிரேமில் கட் செய்து அதை அடுத்த காட்சியின் எந்த பிரேமுடன் இனைத்தால் அந்த கட் தெரியாது? ஒரு வைட் காட்சியும் ஒரு க்ளொசப்பும் எப்படி இணையும்,எப்படி இணையாது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.இந்த சிறிய வயதில் அவருக்கு படத்தொகுப்பில் இருந்த ஞானமும் தேடலும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பொதுவாகவே காட்சியின் வீரியம் பயங்கரமானது.அது நல்ல காட்சியாக இருந்தாலும் கெட்ட காட்சியாக இருந்தாலும் காட்சி நம் மனதையும் உடலையும் பாதிக்கும் விதம் எழுத்தில் சொல்ல முடியாத அளவுக்குத் தீவிரமானது.கெவின் கார்ட்டர் என்ற புலிட்சர் விருது பெற்ற புகைப்படக்கலைஞர் ஏன் தற்கொலை செய்துகொண்டார்?ஜான் ஐசக் கருணாகரன் என்கிற புகைப்பட கலைஞர் போர்காட்சிகளை தொடர்ந்து எடுத்து எப்படி மன நலம் பாதிக்கப்பட்டார்? காட்சி மனதைப் பாதிக்கும் விதம் பயங்கரமானது.
நான் ஒவ்வொரு படத்தில் பணிபுரியும் போதும் படப்பிடிப்பு முடிந்து விடும்.ஆனால் அது அந்தப் படத்தின் காட்சிகள் திரும்பத்திரும்ப மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். படப்பிடிப்பு முடிந்து ஒருமாதம் வரை அந்தக்காட்சிகள் தூக்கத்திலும் கனவிலும் துரத்திக்கொண்டே இருக்கும்.இது ஒருவிதமான பைத்திய நிலைதான்.காட்சிகளுடன் தீவிரமாக இயங்கு யாரும் இதை உணரமுடியும்.சுனாமி நேறத்தில் அதைப்படம் பிடிக்க நான் மெரினா கடற்கரைக்குச்சென்றிருந்தேன்.அடுத்த இரண்டுநாட்களில் தீவிரமான காய்ச்சலில் நான் பாதிக்கப்பட்டேன்.சரியாகத்தூங்க ஒருமாதம் ஆனது. இன்னும் கனவில் என் அறைக்குள் கடல் வருகிறது. ஓடுகிற கால்கள் வருகின்றன.அழுகிய முகங்கள் தெரிகின்றன. ஏனெனில் காட்சி என்பது உணர்வுகளோடு மிக நெருக்கமாக தொடர்புடையது.

பரதேசி படத்தில் ஊர்மக்கள் புலம் பெயர்ந்து செல்கிற காட்சி இன்னும் என் கனவில் வந்துகொண்டே இருக்கிறது. அந்த நேரத்தில்தான் கூட்டம் கூட்டமாக ஈழமக்கள் புலம்பெயர்கிற கொல்ல்பபடுகிற காட்சிகள் வந்துகொண்டே இருந்தன.இரண்டு காட்சிகளும் ஆழ்மனதில் இணைந்துவிட்டது. இன்னும் தூக்கத்தில் அவரக்ள் தூசி பறக்கிற காய்ந்த செம்மண் வெளியில் நடந்து செல்கிற காட்சி துரத்திக்கொண்டே இருக்கிறது.தற்கொலை செய்துகொண்ட ஓவியர்கள்,மன நிலை பிறந்த கலைஞர்கள்,ஏன் வரலாற்றில் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள். காட்சி துரத்தும்.கனவில் நனவில் மனதை மூளையைப் பாதித்துக்கொண்டே இருக்கும்.

ஒருபடம் முடித்து அதில் இருந்து வெளியில் வர ஒருமாதத்திற்கு மேல் ஆகும் என்றால் கிஷோர் ஒரே நேரத்தில் ஐந்து படங்களுக்கு மேல் புரிந்துகொண்டிருந்தார்.எல்லாம் ஒரு டைம்லைனில் மாறாத துண்டுக் காட்சிகள்.ஒரு காட்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தை தனக்குள்ளாக பெற்றுக்கொள்கிறது.இதைதான் தார்க்கோவ்ஸ்கி Sculpting in Time என்று நூலாகவே எழுதினார்.அந்த நேரத்தை ஒரு காட்சிக்குள் இயல்பாகப் பொருத்துவது என்பது சாதாரண வேலையல்ல. அதுவும் சினிமா குறித்த உயர்ந்த கனவுகளும் நோக்கங்களூம் தேடல்களும் கொண்ட ஒருவர் தனது உயர்ந்த நோக்கங்களோடு வணீக ரீதியான படங்களுடன் அதன் காட்சிகளுடம் தொடர்ந்து வேலை செய்வது என்பது சாதாரணமான விஷயமல்ல. அது அவர் மூளைக்குள் ஒவ்வொரு நாளும் நடக்கிற துரத்தல்.

நமது படங்களில் சராசரியாக குறைந்தபட்சம் 2000 ஷாட்கள் இருக்கின்றன.அதுவும் டிஜிட்டல் வந்த பிறகு இந்த ஒவ்வொரு காட்சியும் சராசரியாக ஐந்து டேக்குகள் வரை எடுக்கப்படுகின்றன.இந்த பத்தாயிரத்தில் இருந்து சரியான 2000த்தை தேர்வு செய்யவேண்டும். அதை வரிசையாக்கிப் பார்க்க வேண்டும்.அதற்குள் ஒரு லயத்தை உருவாக்க வேண்டும்.இதுபோல ஒரே நேரத்தில் ஐந்து படங்கள்.ஒன்று ஆக்‌ஷன்,இன்னொரு த்ரில்லர்,இன்னொன்று ரொமான்ஸ்,இன்னொன்று இன்னொரு வகை இப்படி பலவகைப் பட்ட காட்சிகளோடு ஒரு இளைஞன் பணிபுரியவேண்டும்.

இதில் ஒரு படத்தை உரிய நேரத்தில் தயார் செய்து கொடுக்க வேண்டிய நிர்பந்தங்கள் காலக்கெடுக்கள் அதற்குள் பணிபுரியவேண்டும்.அந்த மன அழுத்தமும் காட்சிகளின் இயல்பான துரத்தலும் கிஷோரின் மூளையைப் பாதித்திரிக்கிறது. மருத்துவம் இப்போதெல்லாம் காய்ச்சலைக்கூட உயிர்க்கொல்லியாகத்தான் பார்க்கிறது.
இருமலைக் கூட நாம் உயிரை இழந்துவிடுகிற கற்பனையோடுதான் அணுகுகிறோம். நம் நாகரீகமும் வேகமும் நமக்குத் தந்த பயங்கள் இவை. நம் உடல் அசாதரணமான இயந்திரம் என்பதையும் நம் முன்னோர்கள் நமக்குத்தந்த வைத்திய முறைகளையும், பழக்க்ங்களையும் தொலைத்ததன் பரிசுகள்தான் இவை. நம் மூளையின் சூக்குமங்கள் நூறில் ஒருபங்கு கூட இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.உடலை நாம் ஓய்வு இல்லாமல் அளவுக்கு அதிகமாக வருத்தும்போது உடல் தானாகவே ஓய்வெடுத்துக்கொள்ளும்.அப்படி ஒரு ஓய்வுதான் இது.

வெள்ளிக்கிழமை அனுமதிக்கப் பட்டார்.இருபத்துநான்கு மணி நேரம் கடக்கட்டும் பார்க்கலாம் என்றார்கள்.ஐந்து நாட்கள் கடந்துவிட்டன.முன்னேற்றம் வருகிறது.தணிகிறது.
அன்பான கிஷோர்..

பலமுறை அலுலகத்தில் உங்களைப் பார்க்கும் போது கண்கள் மூடி தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.அது தூக்கமா அல்லது சிறிய ஓய்வா என்பது எனக்குத்தெரியாது.அதுபோலத்தான் இந்த ஐந்துநாட்கள் இந்த மருத்துவமனையில் நீங்கள் இருப்பதை வேலைப்பளுவிற்கான ஓய்வு என்று நான் நினைத்துக்கொள்கிறேன். 

மருத்துவமனையின் வெளியே உங்கள் நண்பர்கள் காத்திருக்கிறார்கள். ஒரே மகனின் உடல் நலக்குறைவை நினைத்து உங்கள் அப்பாவும் உடல்நலம் குறைந்து நீங்கள் இருக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சராசரிக்குடும்பத்தில் பிறந்த உங்களின் மருத்துவச்செலவுக்கு குடும்பத்தினர் என்ன செய்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. உங்கள் கலையில் இந்த தேசத்திலேயே சிறந்தவர் என்று விருது வாங்கி இருக்கிறீர்கள். இருந்தும் என்ன..

கோடிகள் புரளும் திரைப்பட உலகத்தில் புகழின் வெளிச்சத்தில் இருக்கும்போதே கவனிப்பவர் யாருமற்று ஐந்துநாட்களாக தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் மூன்றுமாதங்களில் உங்கள் திருமணம் இருக்கிறது.

எழுந்து வாருங்கள், உங்கள் திருமணத்திற்கு நானும் நண்பர்களும் வருவோம். இதுவும் ஒரு காட்சியாக மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. மருத்துவம் கடந்த அற்புதம் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன் கிஷோர்.

உங்கள் ஓய்வை முடித்துக்கொண்டு சீக்கிரம் குணமடைந்து வாருங்கள். நீங்கள் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.” ‪#‎GetWellSoonKishore‬

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close