Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எமி ஜாக்சனை காப்பாற்றிய கருணாகரன்!

திருகுமரன் இயக்கத்தில் அடுத்து உதயநிதி பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஆக்‌ஷனை மையமாக வைத்து உருவாகி வருகிறது இந்த படம். 

முதற்கட்ட படப்பிடிப்பாக கேரளாவின் மலைப்பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. அப்போது எமி ஜாக்சன் கேரள மலையில், செங்குத்தான இடம் ஒன்றில் ஏறும்போது தடுமாறி சறுக்கி விட்டார், உடனே கருணாகரன் அவருக்கு கைகொடுத்து தூக்கியிருக்கிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத படக்குழு பதரிவிட்டனர். இதனை ட்விட்டரில் எமிஜாக்சன் கருணாகரனுக்கு நன்றி கூறியதோடு நல்ல டீம் உங்களை மிஸ் பண்ணுகிறேன். என்னை காப்பாற்றிய கருணாவுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார். 

உதயநிதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரியல் ஹீரோ என ட்வீ செய்ய நான் என் கடமையத்தான செஞ்சேன்னு கருணாகரன் பதில் ட்வீட் செய்துள்ளார். எப்படியோ ஊர் விட்டு ஊர் வந்த பொண்ண காப்பத்திட்டீங்கப்பா என்ற ரீதியில் ட்விட்டரில் கமெண்டுகள் பறக்கத் துவங்கிவிட்டன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close