Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காணாமல் போன மலேசிய விமான கதையில் கமல் ?

பிரபுதேவா இயக்கத்தில் கமல் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக ஓரிரு நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. முழுநீள த்ரில்லர் கதையாக இருக்கலாம் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அப்படம் குறித்து புதிய செய்தியாக ராஜேஷ் குமாரின் பிரபல நாவலான ‘வெல்வெட் குற்றங்கள்’ நாவலையும், மலேசிய விமானம் தொலைந்துபோன மர்மத்தையும் பின்னி ஒரு கதையாக எடுக்க உள்ளதாகவும் அதில் கமல் நடிக்க உள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 இதற்கான முழு படப்பிடிப்பையும் ஒரு தீவில் எடுக்க எண்ணியே கமல் மொரீசியஸ் தீவுகளில் லொகேஷன்கள் தேர்வு செய்துவிட்டு வந்துள்ளாராம். இந்த படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

படத்தின் பெரும்பகுதியை பிரபுதேவாவும், சில பகுதிகளை கமலும் இயக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இவர்கள் இருவரும் இணைந்து ‘காதலா காதலா’ படத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.  மேலும் பிரபுதேவா இந்தியில் முன்னனி இயக்குநராக இருந்துவரும் நிலையில் தமிழ் , இந்தி என இரண்டிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என தெரிகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close