Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ’பெஞ்ச் டாக்கீஸ்’ படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் சிறப்பு பேட்டி..

'பெஞ்ச் டாக்கீஸ்'னு கார்த்திக் சுப்பராஜின் 'ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்' ஒரு ட்ரெய்லர் வெளியிட  யூ-ட்யூப் இல்பலர் பார்வைக்கு எட்டியும் பேஸ்புக்கில் லைக்ஸ்களைக் குவித்தும் மார்ச் 6 (இன்று) வெளிவரவிருக்கிறது.அதில் விஜய்சேதுபதியும் இருக்க அது படமா இல்லைக் குறும்படமா என்ற குழப்பக் கேள்விகளுடன் அதை வெளியிடும் கார்த்திக்சுப்புராஜை அணுகினோம்.

***முதலில் 'ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்' உருவான கதை பற்றி சொல்லுங்களேன்.

நானும் ஐ.டி துறையிலிருக்கும் என் நண்பர்கள் கார்த்திகேயன்,எழில்,கல்யாண் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து ஆரம்பிச்சது தான் இந்த 'ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்'.ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே நாங்க இத ஆரம்பிச்சாலும் முறையா லான்ச் பண்ணது ஆறு மாசத்துக்கு முன்னாடி தான்.திரைத் துறையில தொழில்நுட்பம் சம்பந்தமா ஏதாவது புதுசா பண்ணனும்னு நெனச்சோம்.அப்படி ஆரம்பிச்சது தான் இது. இப்போ இது மூலமா 'பெஞ்ச் டாக்கீஸ்' னு ஒரு படத்த வெளியிடுறோம்.அது தான் நீங்க பார்த்த ட்ரெய்லர்.

***'ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்' மூலமா என்னென்ன விஷயங்கள் செஞ்சுட்டு வர்றீங்க?

ஸ்டோன் பெஞ்ச் க்ரியேஷன்ஸில் இரண்டு பிரிவுகள் உண்டு.ஒன்று பெஞ்ச் ப்ளிக்ஸ்(Bench flix) மற்றொன்று பெஞ்ச் கேஸ்ட்(Bench cast).

பெஞ்ச் ப்ளிக்ஸ்-முழுக்க முழுக்க குறும்படங்களுக்கானது.நல்ல குறும்படங்கள  எல்லாரிடத்திலும் கொண்டு போய்சேர்க்குறதுக்கான ஒரு பிளாட்பார்ம் தான் இது. இப்போ  பல ஜானர்ல பலர் அனுப்புன குறும்படங்கள்ல இருந்து நாங்கதேர்ந்தெடுத்தது தான் இந்த 6 படங்கள்.

பெஞ்ச் கேஸ்ட்-

இதுலகுறும்படங்கள்,திரைப்படங்களுக்கான  நடிகர்களைத் தேர்ந்தெடுப்போம்.2500 பேருக்கும் மேல ரெஸ்யூம் அனுப்பிக்கிட்டு இருக்காங்க.அவங்கள்ல இருந்து திறமையான ஆட்களைத்  தேர்ந்தெடுத்து  தான் இந்தக்குறும்படங்கள்லயும் திரைப்படங்கள்லையும்  நடிக்க வச்சிட்டு இருக்கோம் .

 ***'ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்' தயாரிக்கும் 'பெஞ்ச் டாக்கீஸ்' படமா? இல்ல குறும்படமா?

ஆறு வெவ்வேறு இயக்குனர்களால எடுக்கப்பட்ட ஆறு குறும்படங்களோட தொகுப்பான ஒரு படம் தான் 'பெஞ்ச் டாக்கீஸ்'.சென்னை,கோவை,பெங்களூரு போன்ற முக்கிய நகரங்கள்ல இந்தப்படம் சத்யம்,மாயாஜால் மற்றும் பி.வி.ஆர் சினிமாஸ் வெளியிடுறாங்க.மற்றப் படங்களப் போலவே சாதாரணக் கட்டணம் தான் இதுக்கும்.மக்கள் தியேட்டருக்கு வந்து நல்லா ரசிச்சிட்டு போற விதமா இருக்கும். இதில் ஒரு சிறப்பம்சம் என்னன்னா இதுல என்னோடபடமும் ஒண்ணு இருக்கு. அதுல விஜய் சேதுபதி லீட் ரோல் எடுத்து பண்ணியிருக்கார்.

 ***எப்படி திடீர்னு இப்படி ஒரு ஐடியா பிடிச்சீங்க?

திரைப்படங்கள் அளவுக்கு குறும்படங்கள் மக்களுக்கு போய் சேருறது கிடையாது.வர்ற குறும்படங்கள் எல்லாம்  யூட்யூப்,மற்ற சமூக வலைத்தளங்கள்லையே வந்துடுறதுனால இணைய தளங்கள்லையே எல்லாரும் பாத்துமுடிச்சிடுறாங்க.இதனால ஒரு படத்துக்கு எந்த அளவு மரியாதையும் வரவேற்பும் ரசிகர்கள் குடுக்குறாங்களோ அதைப்போல ஒரு குறும்படத்திற்கு கிடைக்கிறதில்ல.குறும்படம் பார்க்க மக்களை தியேட்டருக்கு கூட்டிட்டு வர்றதே எங்க நோக்கம். இந்த எண்ணம் மூலமா வந்தது தான் இந்த ஐடியா.

 ***இந்த முயற்சி தொடருமா?

இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் யாரும் பண்ணாத புது முயற்சி இது.குறும்படங்கள தியேட்டர்ல பார்க்க மக்களைவரவழைக்கிறதுக்கான எங்களோட முதற்கட்ட முயற்சி தான் இது.நல்லபடியா மக்களோட வரவேற்ப கிடச்சுதுன்னா,இந்த முயற்சி தொடரும்.ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை இந்த மாதிரி குறும்படங்களை தொகுத்து ஒரு படமா வெளியிட்டு இதத் தொடர்ந்து பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.

 ***உங்களோட அடுத்த படம் பற்றி....?

'பீட்சா','ஜிகர்தண்டா' படங்களுக்கு அடுத்து இப்போ 'இறைவி'னு ஒரு படம் பண்ண போறேன்.கதாநாயகர்களா எஸ்.ஜே.சூர்யா,விஜய் சேதுபதி,'பாபி'சிம்ஹா நடிக்கிறாங்க.இதோட ஸ்க்ரிப்ட் முடிஞ்ச நிலைல ஏப்ரல் கடைசிலஇதோட ஷூட்டிங் ஆரம்பிக்கிற திட்டத்துல இருக்கோம்.த்ரில்லர்,ம்யூசிக்கல் கேங்க்ஸ்டர் னு இருந்த என் இரண்டுபடங்களிலிருந்து  'காதல் கதை' ங்கிற ஒரு ஜானர்ல இந்த படம் வித்தியாசமா பயணிக்கும்.

 தொடர்பிற்கு : www.benchflix.com : www.benchcast.com

 

--லோ.இந்து--

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close