Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷ்ணுவை சந்தித்து நலம் விசாரித்த அஜித்!

'வெண்ணிலா கபடிக்குழு’ , நீர்பறவை’ ‘மூண்டாசுப்பட்டி’ , தற்போது வெளியான ‘ஜீவா’ என விஷ்ணு தனக்கென தனி இடைத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துள்ளார். மேலும் சிசிஎல் போட்டியிலும் , விஷ்ணுவுக்கு ரசிகர்கள் அதிகம். கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் போது விஷ்ணுவுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, சிகிச்சை மூலம் அவருடைய வலது கையில் மெட்டல் பிளேட் வைக்கப்பட்டது. பிளேட் வைத்த கையோடு அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்தார் விஷ்ணு.

இந்நிலையில், தற்போது அவரது வலது கையில் பொருத்தப்பட்ட மெட்டல் பிளேட் இன்று மருத்துவமனையில் நீக்கப்பட்டது. அதே மருத்துவமனையில் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சில தினங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இன்று விஷ்ணுவிற்கு மெட்டல் பிளேட் நீக்கப்பட்டதை அறிந்த அஜித், விஷ்ணுவை உடனே சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இது குறித்து விஷ்ணு கூறும்போது, ‘அஜித் வந்து என்னை பார்த்தது நலம் விசாரித்தது எனக்கு சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அஜித் ஒரு எளிமையான இனிமையான மனிதர்’ என்றார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close