Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தம வில்லன் நாளில் சகாப்தம்!

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில்  கமல், பாலச்சந்தர், ஊர்வசி, ஜெய்ராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நாயர் நடிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள படம் ‘உத்தம வில்லன்’. படத்தின் பாடல்கள், மற்றும் டிரெய்லர் வெளியாகி நெட்டில் ஹிட்டடித்து வருகிறது. 

பல நாட்களாக இப்படத்தில் வருகைக்காக காத்திருக்கும் வேளையில் படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே நாளில் உதயநிதி ஸ்டாலில், நயன்தாரா , சந்தானம் நடிப்பில் ‘நண்பேன்டா’ படமும் வெளியாகும் என மூன்று மாதங்களுக்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இவ்விரு படங்களுக்கு இடையில் புதிதாக நுழைந்துள்ளது விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சகாப்தம்’. ஏப்ரல் 2ஐ மையமாக வைத்து தற்போது மூன்று படங்கள் ரேசில் இணைந்துள்ளன. இந்த அட்டவணையில் இன்னமும் படங்கள் செருமா என்பது இனிதான் தெரியவரும். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close