Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’விஜய்59’ படத்தில் வடிவேலு?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா,ஸ்ருதி ஹாசன்,  ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத். 

இப்படத்தின் முடிவுக்கு பிறகு விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். எமி ஜாக்சன், சமந்தா நடிக்க உள்ள அப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். இபப்டத்தின் புதிய செய்தியாக வடிவேலு காமெடியனாக நடிக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன. 

இப்படத்தின் விபரங்கள் அனைத்தும் ரகசியமாக இருந்துவரும் நிலையில் அட்லீ வடிவேலுவிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.எனினும் இது எப்படி சாத்தியம் என பலரும் கேள்விகள் எழுப்பி வரும் நிலையில் விஜய் இதற்கு சம்மதிப்பாரா என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. 

எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூன் மாதத்தில் துவங்கப்பட உள்ளது. விஜய் வடிவேலு கூட்டணியில் ‘பகவதி’, ‘போக்கிரி’, ‘சுறா’ , ‘காவலன்’, ‘வில்லு’  என படங்கள் மறக்க முடியாதவை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், போக்கிரி வெற்றி யாவரும் அறிந்ததே. 

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close