Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எனக்குள் ஒருவன் - படம் எப்படி?

நீங்க ஆசைப்படுற ஒரு வாழ்க்கை அது கனவோ , நினைவோ எங்கேயோ கிடைச்சா போதும்னுதான நினைப்போம்
அதுதான் ‘எனக்குள் ஒருவன்’.

தூக்கமே வராத ஒரு அப்பாவி , தூக்கம் வரணும்னு ஒரு மாத்திரைய போட்டுக்கிறான் , கூடவே அவனுக்கு ஆசப்பட்ட வாழ்க்கை கனவாவே வருது. தொடர்ந்து ஒரே கனவு, ஒரே வாழ்க்கை. எப்படி இருக்கும். கடைசியா என்ன ஆகும்ங்கறதுதான் மீதி கதை.

சித்தார்த் தியேட்டர்ல டார்ச் அடிச்சு சீட்ல மக்கள உக்கார வைக்கிற கேரக்டர்ல மனுஷன் வாழ்ந்துருக்காரு. ஆனால் மேக்கப், கொஞ்சம் யோசிச்சுச்சு பெயிண்ட் அடிச்சுருக்கலாம். அடுத்ததா இன்னொரு சித்தார்த் பிரபல ஹீரோ , இப்படி இரண்டு கதை மாறி மாறி ட்ராவல் ஆகறதுல சித்தார்த் முழுமையா கதைய ஆக்கிரமிச்சுருக்காரு.ஆக்கிரமிச்சுத்தான ஆகணும். அவரே ஆசப்பட்டு நடிச்ச படமாச்சே.

பீட்ஸா கடையில வேலை செய்ற பொண்ணா தீபா சன்னதி, இன்னும் கொஞ்சம் வேலை செஞ்சா தமிழ்ல ஒரு ரவுண்டு வரலாம். நல்ல பளிச் கண்கள், எதார்த்தமான நடிப்பு. இருந்தாலும் அந்த பொண்ணு அளவுக்கு இல்லை. அதான் ஒரிஜினல் ’லூசியா’ பட ஹீரோயின் ஸ்ருதி ஹரிஹரன். சரி அவங்களையே நடிக்க வெச்சுட்டா அதெப்படி ரீமேக் ஆகும்.

ஸ்ருஷ்டி அந்த புள்ளைய பாத்தாலே ஏன் ஒரீரு சீன்கள்ல மட்டுமெ பயன் படுத்தணும்னு யோசிக்கிறாங்களோ. ‘டார்லிங்’ பட பாணியில இதுலயும் வந்துட்டு போறாங்க. ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய் இவங்கள்லா கொடுத்த கேரக்டரை அழகா பண்ணி இருக்காங்க.

இப்படி பட்ட படங்கள பாக்க முரட்டுத்தனமான ஒரு புத்திசாலித்தனம் வேணும். அந்த அளவுக்கு ட்விஸ்டுகள் கட்டக்கடைசியில. இருந்தாலும் கன்னட ’லூசியா’ படத்த பார்த்தவங்களுக்கு ஏதோ மிஸ் ஆகுதே மொமெண்ட் இருக்கும். கொஞ்சம் ஸ்லோ கதை, கமர்ஷியலுக்கான ஆக்‌ஷன், சேஸிங்,காமெடிகள் இதெல்லாம் இல்லாம படம் சரக்கு ரயில் பாணியில போகும்.

இசை சந்தோஷ் நாராயணன் , ‘பிரபலமாகவே’ , ‘ஏண்டி இப்படி’, ‘குட்டி பூச்சி’ பாடல்கள் வித்யாசமான பீட்டுகள், ‘பூ அவிழும்’ பாடல் மாத்திரைய போடாமலேயே கனவுலையும் கேக்குது. பின்னனியும் நல்லா வேலை செஞ்சுருக்காரு.

உங்களோட சாதாரண வாழ்க்கை யாருக்கோ பெரிய கனவா இருக்கும்’ இந்த மெஸேஜ அழகா பதிவு பண்ணியிருக்காரு இயக்குநர் பிரசாந்த் ராமர்.

சரி படம் பாக்கலாமா? வித்தியாசமான பட அனுபவம் வேணும்னு நினைக்கறவங்க இந்தப்படத்தை கண்டிப்பா பாக்கலாம். மத்தபடி ஜாலியா போயி விசில் அடிக்கணும், டிக்கெட்ட கிழிச்சு காத்துல பறக்க விடணும்னா சாரி பாஸ் இது வேற மாதிரி படம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்