Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியிலும் ஒரு ‘சின்ன வீடு’!

1985-ல் அதிரிபுதிரி ஹிட்டடித்த பாக்யராஜின் ‘சின்ன வீடு’ ஞாபகம் இருக்கிறதா?  அதன் லேட்டஸ்ட் இந்தி வெர்ஷனாய் அசத்துகிறது ‘தும் லகா கே ஹெய்ஸா’.

ஷரத் கட்டாரியாவின் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, பூமி பெட்னெகர் நடிப்பில் வந்திருக்கும் இந்தப் படத்தின் கதை சிம்பிள். படிக்காத அழகான ஹீரோவுக்கு படித்த குண்டுப் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து விடுகிறார்கள். திருமண நாளில் இருந்து மனைவி மீது விருப்பமே இல்லாமல் ஒதுங்கி ஒதுங்கிப்போகும் ஹீரோ ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே ஓடிவிட முடிவெடுக்கிறான்.

குடும்பத்தினர் சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் போகிறது. டைவர்ஸ் வரை போகும் சூழலில்  மனைவியின் அன்பு புரியவருகிறது. ஆனாலும் எல்லாமே கைமீறிப் போன சூழல். பிரிந்திருக்கும் மனைவி மீது காதல் அரும்புகிறது ஹீரோவுக்கு. அதன் பிறகு அந்த ஊரில் மனைவியை முதுகில் தூக்கிக்கொண்டு ஓடும் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள முடிவெடுக்கிறான். காதலின் சக்தியால் அந்தப் பந்தயத்தில் ஜெயிப்பதோடு இருவரும் க்ளைமாக்ஸில் இணைகிறார்கள்.

ஹரித்வாரின் பின்னணி, 80, 90-களில் கலக்கி எடுத்த கேசட் ரெக்கார்டிங் சென்டர் நடத்தும் ஹீரோ, குமார் ஷானு, அனுமாலிக் கூட்டணி இசை ராஜ்யம், வட மாநிலங்களில் பெரும்பான்மையாக இருக்கும் குண்டான உடல்வாகுகொண்ட ஹீரோயின், நிறைய ஃபேமிலி சென்டிமென்ட், நிறைய ரொமான்ஸ் என மிக லோ பட்ஜெட்டில் படம் ஸ்லீப்பர் ஹிட் அடித்திருக்கிறது.  இதுல என்ன சமாச்சாரம்னா நம்ம பாக்யராஜ் சாருக்கு இந்த மேட்டர் தெரியுமாங்கிறதுதான்!

- ஆர்.சரண்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close