Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சூப்பர் சிங்கர்' ஜெசிக்காவுக்கு கனடாவில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற ஈழத்தை சேர்ந்த மாணவி ஜெசிக்கா கனடா திரும்பினார். டொரான்டோ விமான நிலையத்தில் ஏராளமான தமிழர்கள் திரண்டு வந்து ஜெசிக்காவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விஜய் டி.வி. நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 2வது இடம் பிடித்த ஈழத்தை சேர்ந்த மாணவி ஜெசிக்காவுக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. அந்த ஒரு கிலோ தங்கத்தையும் தமிழ்நாடு மற்றும் ஈழத்தில் அனாதை குழந்தைகள் வளர்ச்சிக்காக வழங்கினார் ஜெசிக்கா. தனது நற்செயல்  மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ஜெசிக்கா தான் வாழ்ந்து வரும் கனடாவுக்கு திரும்பினார்.

டொராண்டோ விமான நிலையத்தில் ஜெசிக்காவை வரவேற்க ஏராளமான தமிழர்கள் திரண்டிருந்தனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெசிக்காவை பாராட்டி அவர்கள் கையில் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.

இது குறித்து ஜெசிக்கா கூறுகையில், ''என்னை வரவேற்க வந்த தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வரவேற்க விமான நிலையத்துக்கு இவ்வளவு மக்கள் வருவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்த மீடியாக்களுக்கும் எனது நன்றியை தெரித்துக் கொள்கிறேன் '' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close