Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விழாக்காலங்களில் மட்டுமே பெரிய படங்கள் - தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

கால வரையற்ற பட வெளியீடுகள், மற்றும் ரிலீஸ் தள்ளிப்போதல் என திட்டமிடப்படாத பெரிய பட்ஜெட் படங்களின் வருகை சிறு படங்களின் வருகையை பாதிக்கிறது என தயாரிப்பாளர் சங்கம் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். 

இனிமேல் வருடத்தில் 10 நாட்கள் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி என முடிவு செய்துள்ளனர். மேலும் அவை என்னென்ன தேதிகள் எனவும் முடிவு செய்து அறிவித்துள்ளனர். 

ஜனவரி 1(நியூ இயர்), ஜனவரி 15(பொங்கல்), ஜனவரி 26 (குடியரசு தினம்) ஏப்ரல் 14 (தமிழ் புத்தாண்டு), மே 1(உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட் 15( சுதந்திர தினம்) , செப்டம்பர் 17 (விநாயர் சதுர்த்தி), அக்டோபர் 21 (ஆயுத பூஜை) , நவம்பர் 10 (தீபாவளி), டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) என இந்த பத்து நாட்கள் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் என முடிவாகியுள்ளது.

15 கோடிக்கு மேல் உள்ள அனைத்து படங்களும் பெரிய பட்ஜெட் படங்களாகவும் அதற்கு கீழ் உள்ள படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் எனவும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.  இப்படி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படங்கள் அறிவித்தபடி வெளியாகுமா அல்லது இனி அறிவிக்க உள்ள படங்களுக்கு மட்டுமா என்பது இனிதான் தெரியவரும். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close