Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாடகக்கலை ரசிகரா நீங்களா - உங்களுக்காகவே இலவச வாய்ப்பு!

தமிழ் நாடகங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வண்ணம் புதிய வரலாறு மற்றும் புராண நாடங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்கிறது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம். இதையொட்டி 12ஆம் தேதி வரை தினம் ஒரு புராண நாடகத்தை அரங்கேற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்க் கலைகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கும் கலைஞர்களின் நலவாழ்விற்கும் பல்வேறு கலைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் இயல், இசை, நாடகம், நாட்டியம், கிராமியக் கலைகள் தொடர்பான பல்வேறு விழாக்களையும் நடத்தி வருகிறது.

தமிழ் நாடகங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வண்ணம் புதிய வரலாறு மற்றும் புராண நாடங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய அரசினால் சட்டப் பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டு, ரூ.7.50 லட்சம் தொகையை வழங்கி உள்ளது. அவ்வகையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், நாரத கான சபா ட்ரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து 12 ஆம் தேதி வரை தினசரி மாலை 6.30 மணியளவில், டி.டி.கே சாலையில் உள்ள சத்குரு ஞானாநந்தா ஹாலில் புராண நாடக விழாவை நடத்திட உள்ளது. துவக்க நாளான நேற்று ஸ்ரீகிருஷ்ணதரிசனம் நாடகம் அரங்கேறியது.

வரும் 9ஆம் தேதி அன்று மதுரை தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் வழங்கும் பக்தப்பிரகலாதா, 10ஆம் தேதி நாடகக் காவலர் கலைக்கூடம் வழங்கும் அவதாரப்புருஷர் ஸ்ரீ ராமானுஜர், 11ஆம் தேதி தேவி கலைக்கூடம் வழங்கும் காரைக்கால் அம்மையார், 12ஆம் தேதி கங்கை கலாலயா வழங்கும் கிள்ளிவளவன் காதல் ஆகிய புராண நாடகங்கள் மேடையேற்றம் செய்யப்பட உள்ளது. நாடகங்களை காண கட்டணம் எதுவும் கிடையாது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்