Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெகிழ்ச்சியடைந்த சிம்புவின் அம்மா!

சிம்பு நடித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரவிருக்கும் படம் “வாலு” விஜய் சந்தர் இயக்கத்தில் ஹன்சிகா நாயகியாக, பல்வேறு காரணங்களால் ஜவ்வாக இழுத்து முடிவில் மார்ச் 27ல் வெளியாகவிருக்கிறது “வாலு”. தன் அம்மா உஷா ராஜேந்தருக்கு வாலு படத்தினை திரையிட்டு காட்யிருக்கிறார் சிம்பு.

சிம்புவின் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண் அவரின் அம்மா உஷா ராஜேந்தர். அவருக்காக மகளிர் தினமான நேற்று சிம்பு சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து வாலு படத்தைப் போட்டு காட்டியிருக்கிறார்.

சிம்பு கூறுகையில், “ என் அம்மா தான் என்னோட முதல் விமர்சகர். சீக்கிரத்துல என் படத்த பார்த்து திருப்தியடைய மாட்டாங்க. இந்தப் படத்தப் பார்த்ததும், என்ன வந்து கட்டித் தழுவிப் பாராட்டினாங்க. படம் சூப்பர்னு சொன்னது எனக்கு ரொம்ப பெரிய நம்பிக்கைய கொடுத்துருக்கு.

பல சஸ்பென்ஸ் கலந்த காதல் கதை தான் “ வாலு” ஹன்சிகா , சந்தானம் , சிம்பு கலவையில் படம் காமெடி கலந்து இருக்குமாம். மேலும் எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் கெட்டப்களில் சரோஜா தேவி, குஷ்பு, சிம்ரன் உடன் நடனமும் ஆடியிருக்கிறார் சிம்பு.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close