Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விக்ரமுக்கு ஜோடி காஜல் அகர்வால்!

’ஐ’ படத்தின் காரணமாக ஓரிரு வருடங்களாக படங்களே இல்லாமல் இருந்த விக்ரம் தற்போது அப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு முழுமூச்சில் படங்களை கொடுக்கும் எண்ணத்தில் இறங்கியுள்ளார். ‘10 எண்றதுக்குள்ள’ படம் ஓரளவிற்கு முடிந்துவிட்ட நிலையில் தற்போது அடுத்ததாக ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கவிருக்கிறார். 

’அரிமா நம்பி’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் அடுத்த படத்தை நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கவிருக்கிறார். 

இதேவேளையில் முதல்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஹீரோயின் தேர்வு நடைபெற்றுவருகிறது. ஜூன் மாதம் இரு படங்களும் ஒரே நேரத்தில் துவங்கப்பட உள்ளது. கால்ஷீட் பிரச்சனை வந்திவிடக் கூடாது என்பதற்காக இரு படங்களுக்கும் சம அளவில் 10 நாட்கள் என்ற விதம் பிரித்துக் கொடுத்துள்ளாராம். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்