Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மார்சியல் கலை கற்கும் விஜய்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ’புலி’. விஜய் இரட்டை வேடத்தில் நடித்துவரும் இப்படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

ஃபேண்டசி கதையாக உருவாகிவரும் இப்படத்தின் பாடல், காமெடி என மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது சண்டைக்காட்சிகளை படமாக்கத் துவங்கியுள்ளாராம் சிம்புதேவன். கடந்த சில நாட்களாக கேரளாவில் முகாமிட்டிருக்கும் ‘புலி’  படக்குழுவினர் வாகாமன் நீர்வீழ்ச்சியில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். தற்போது அதைத்தொடர்ந்து அங்கு மஹோகனி எனும் இடத்திலுள்ள அடர்ந்த காடுகளில் அதிரடி சண்டைக்காட்சிகளை நடத்த இருக்கிறார்களாம்.

இந்த சண்டைக் காட்சியில் விஜய் முதன் முறையாக மார்சியல் கலை கற்றுக்கொண்டு நடிக்கப் போகிறாராம். இதற்காக தாய்லாந்திலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் வரவழைப்பட்டுள்ளனர். மன்னர் யுகத்திற்கான சண்டைக்காட்சிகள் இங்கு படமாக்கப்படும் எனத் தெரிகிறது. இதுதவிர அதிரபல்லி என்ற இடத்திலும் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close