Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீங்க போங்க நான் கூப்பிடுகிறேன் - யார் அந்த அடுத்த அதிர்ஷ்டசாலி!

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘புலி’. இப்படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது. இப்படத்தின் முடிவுக்கு பிறகு விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். எமி ஜாக்சன், சமந்தா நடிக்க உள்ள அப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இதற்கிடையில் தற்போது விஜய் 5 முக்கியமான இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளாராம். அவர்கள் யார் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கதை கேட்டுள்ள ஐந்து பேரிடமும் விஜய் இன்னமும் முடிவு சொல்லவில்லையாம். 

நீங்க போங்க நான் கூப்பிடுகிறேன் என கூறியுள்ளாராம் விஜய். தனது 60 படம் யாருடன் என்பதை அட்லீ படத்தின் படப்பிடிப்பின் போது வெளியிடும் திட்டத்தில் விஜய் இருக்கிறாராம். எனினும் யார் அந்த 5 பேர், விஜய்யின் 60வது படம் யாருக்கு என்ற கேள்வியே இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்காக மாறியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close