Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வில்லனாக நடிக்கும் பவர் ஸ்டார்!

’லத்திகா’ படம் மூலம்  சினிமாவில் நுழைந்த பவர் ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’, ‘ ஐ’ என பல முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் காமெடியானாக நடித்தார்.தற்போது காமெடியனாகவே நடித்து வந்த பவர் ஸ்டார் வில்லன் அவதாரம் எடுக்கவிருக்கிறார். 

’கோணலா இருந்தாலும் என்னோடது’ என்கிற படத்தில் தான் பவர் ஸ்டாரை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வில்லனாக நடிப்பதை பார்த்து மக்கள் பயந்தால் பரவாயில்லை, ஆனால் அதையும் பார்த்து சிரித்து விட்டால் கேரக்டர் வீணாகிவிடுமே என்று முதலில் யோசித்தாராம் பவர் ஸ்டார்.

 

தொடர்ந்து கேட்டுக்கொண்டதால் தற்போது நடிக்க சம்மதித்துவிட்டாரம் பவர் ஸ்டார். எனினும் அவரது உண்மையான கேரக்டர் என்பதால் கண்டிப்பாக அது ஒத்துவரும் என நம்பிக்கையுடன் இருக்கிறாராம் பவர் ஸ்டார் சீனிவாசன் . 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்